05.10.17- சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த இல்லத்தின் புணர்நிர்மானத்துக்காக நிதி கையளிப்பு..

posted Oct 5, 2017, 9:44 AM by Habithas Nadaraja   [ updated Oct 5, 2017, 10:14 AM ]
உலகின் முதல் தழிழ் பேராசிரியர் முத்தழிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாநந்தர் மாநாடு-2017 நிகழ்வுகள் 05.10.2017, 06.10.2017 07,10.2017ஆம் திகதிகளில் மூன்று நாட்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் இராஜதுரை அரங்கில்  இன்றைய தினத்திலிருந்து  ஆரம்பமாகி  மிகவும் சிறப்பாக பெற்று வருகின்றது.

இன் நிகழ்வில் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த காரைதீவு மண்ணிலுள்ள இல்லத்தின் புணர்நிர்மானத்துக்காக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒரு தொகை நிதி சிறைச்சாலை மறுசீரமைப்பு  மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள்  அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் மற்றும்  காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகாத்த பணிமன்றத்திடமும் கையளிக்கப்பட்டது.
Comments