05.10.17- சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய மாநாட்டின் ஆரம்ப வைபவக நிகழ்வு..

posted Oct 5, 2017, 5:21 AM by Habithas Nadaraja   [ updated Oct 5, 2017, 5:24 AM ]
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் உலகின் முதல் தழிழ் பேராசிரியர் முத்தழிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாநந்தர் மாநாடு-2017 நிகழ்வுகள் 05.10.2017, 06.10.2017 07,10.2017ஆம் திகதிகளில் மூன்று நாட்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் இராஜதுரை அரங்கில் மிகவும் சிறப்பாக இடம் பெறவுள்ளது.

இதன் ஆரம்ப வைபவம் இன்றைய தினம் கோலாகலமாக கல்லடியில் உள்ள சுவாமி விபுலானந்தரது சமாதியிலிருந்து சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனம் வரை ஊர்வலத்துடன் ஆரம்பமானது.

மாண்புமிகு செல்லையா இராஜதுரை முன்னாள் பிரதேச அபிவிருத்தி இந்து கலாச்சார அமைச்சர் முன்னிலையுடனும் எந்திரி.பொ.சுரேஷ் செயலாளர் சிறைச்சாலை மறுசீரமைப்பு  மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு அவர்களின் தலைமையுடன் ஆரம்பமான நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாண்மிகு டி.எம்.சுவாமிநாதன் சிறைச்சாலை மறுசீரமைப்பு  மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் கௌரவ அதிதியாக மாண்மிகு வே.இராதாகிருஷ்ணன் கல்வி இராஜாங்க அமைச்சர் சிறப்பு அதிதிகளாக கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்டம், கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இன் நிகழ்வில் கொழும்பு இராமகிருஷ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்தா மஹராஜ் அவர்களின் ஆசியுரை
கொளரவிப்புகள், சுவாமி விபுலாநந்தர் நினைவு விருது வழங்குதல், யாழ் நூல், மதங்க சுளாமணி நூல்களின் வெளியீடு அதிதிகளின் உரை மற்றும் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் மாணவர்களின் நடன நிகழ்வுகளும் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.


Comments