06.02.20- அம்பாறை மாவட்டமட்ட கூடைப் பந்தாட்டப் போட்டியில் காரைதீவு அணி வெற்றி..

posted Feb 5, 2020, 4:30 PM by Habithas Nadaraja   [ updated Feb 5, 2020, 4:31 PM ]
அம்பாறை மாவட்டமட்ட கூடைப்பந்தாட்டப்போட்டியில் காரைதீவு அணி வெற்றி
அமெரிக்காவில் ஹெலிவிபத்தில் பலியான கூடைபப்ந்தாட்ட பிரபலவீரருக்கு அஞ்சலி..


அம்பாறை மாவட்ட மட்ட பிரதேசசெயலகங்களுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் 60:25 என்ற கோல் சூட்டிங் அடிப்படையில் கல்முனை அணியை தோற்கடித்து காரைதீவு பிரதேசசெயலக அணி வெற்றிவாகை சூடியுள்ளது.மாவட்டமட்டப்போட்டியில் சம்மாந்துறை கல்முனை மற்றும் காரைதீவு பிரதேச செயலக அணிகள் பங்குபற்றின. இறுதிப்போட்டியில் கல்முனை மற்றும் காரைதீவு அணிகள் தேமாதின.

மேற்படி போட்டி காரைதீவு விபுலாநந்தா மைதானத்தில் (02.02.2020) விளையாட்டு உத்தியோகத்தர் பத்மநாதன் வசந்த் தலைமையில் நடைபெற்றது.அதிதிகயாக அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் அமீர்அலி மற்றும் காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
 
அஞ்சலி ! 

இந்நிகழ்வில் அண்மையில் அமெரிக்காவில் ஹெலிகொப்டர் விபத்தில் பலியான பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பிறையன் மற்றும் அவரது புதல்வி ஆகியோருக்கு அஞ்சலி நிகழ்வும் அத்தருணம் மைதானத்தில் நடைபெற்றது.அவருக்கு அகல்விளக்கில் சுடரேற்றி 5நிமிடநேரம் மௌனஅஞ்சலி செலுத்தி அவர்பற்றி எடுத்துக்கூறப்பட்டது.

Comments