06.04.21- சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த கிண்ணத்தை FIRE HORSES அணியினர் தனதாக்கினர்..

posted Apr 5, 2021, 7:02 PM by Habithas Nadaraja
2011 உயர்தர மாணவர் ஒன்றியமும், டைனமிக் விளையாட்டுகழகமும் இணைந்து நடாத்தும் சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த  BBL Battle League 2021 ஆண்டுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்   02.04.2021ம் திகதி தொடக்கம் 04.04.2021ம் திகதி வரை காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. 

இப் போட்டி காரைதீவில் முதல் முறையாக பல உயர்தர மாணவ ஒன்றியங்களை சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டது.இப் போட்டியின் இறுதிப்போட்டி  04.04.2021ம் திகதி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. 

இறுதிப்போட்டியில் 2012ம் ஆண்டு FIRE HORSES அணியனரை எதிர்த்து KARAI BULLS அணியினர் மோதினர் இறுதில் 2012ம் ஆண்டு FIRE HORSES அணியினர் வெற்றிவாகை சுடினர்.

திரு.V.ராஜமோகன்( Eng) தலைவர் (2011 உயர்தர மாணவர் ஒன்றியம் தலைமையில் நடைபெற்ற காரைதீவு)
இப்போட்டிக்கு பிரதம அதிதியாக கௌரவ K.ஜெயசிறில் (தவிசாளர் பிரதேச சபை காரைதீவு) கௌரவ அதிதிகளாக திரு.S.ஜெகராஜன் (பிரதேச செயலாளர் காரைதீவு) திரு S.L விஜயசேகர (சிறைச்சாலை அத்தியட்சகர் மட்டக்களப்பு)  திரு K.D.சுரவீர ஜெயலத் (பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்மாந்துறை) சிறப்பு அதிதியாக திரு P. சிவானந்தம்( ஓய்வு நிலை நிர்வாக உத்தியோகத்தர் பிரதேச செயலகம் காரைதீவு) விசேட அதிதிகளாக திரு.B. சந்திரேஸ்வரன் (அதிபர் விபுலானந்த மத்திய கல்லூரி காரைதீவு) திரு.S.சுரநுதன் (பிரதி கல்வி பணிப்பாளர் திருக்கோவில்) திரு.Y.கோபிகாந்த் (தலைவர் பலநோக்கு கூட்டுறவு சங்கம் காரைதீவு) காரைதீவு திரு.S.பிரசாத் (கணினி தரவு இயக்குனர்) திரு.I.தரணிதரன்(MD-T.A.ENTERPRISES) ஆகியார் கலந்து சிறப்பித்தனர்.

Comments