06.07.19- கிழக்கு மாகாண மட்டப் போட்டியில் ஹொக்கிலயன்ஸ் அணி சாம்பியன் 3வது தடவையாக தேசிய மட்டத்திற்குத்தெரிவு..

posted Jul 5, 2019, 7:26 PM by Habithas Nadaraja
கிழக்கு மாகாண விளையாட்டுத்துறைத்திணைக்களம் நடாத்திய கிழக்கு மாகாணமட்ட ஹொக்கி போட்டியில் அம்பாறை மாவட்ட ஹொக்கிலயன்ஸ் அணிமுதலிடத்தைப்பெற்று சாம்பியனானது.

அம்பாறை மாவட்டஅணியில் காரைதீவு ஹொக்கிலயன்ஸ் அணியினரே உறுப்பினர்களாவர்.இந்த அணி மூன்றாவது தடவையாக கிழக்கில் முதலிடம்பெற்று தேசியமட்டப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

இப்போட்டியில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டஅணிகள் பங்கேற்றன.இப்போட்டி காரைதீவு விபுலாநந்த மததியமகவித்தியாலய மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் திருகோணமலை அணியும் அம்பாறை மாவட்ட அணியும் மோதின. இப்போட்டியில் அம்பாறை மாவட்ட காரைதீவு ஹொக்கிலயன்ஸ் அணி 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிவாகைசூடியது.

அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் அமிர்அலி மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் முன்னிலையில் இப்போட்டி நடைபெற்றது.

த.லவன் தலைமைதாங்கும் காரைதீவு ஹொக்கிலயன்ஸ் கழகம் கிழக்கில் தொடர்ச்சியாக சாதனைபடைத்து  வருவது குறிப்பிடத்தக்கது.


(காரைதீவு  நிருபர்)
Comments