06.09.17- இருபெரும் வீதிகள் விரைவில் கார்ப்பட் வீதிகளாகமாறும்..

posted Sep 5, 2019, 6:39 PM by Habithas Nadaraja
இருபெரும் வீதிகள் விரைவில் கார்ப்பட் வீதிகளாகமாறும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் ஜெயசிறில் தெரிவிப்பு..

காரைதீவுப்பிரதேசத்தில் பலவருடங்களாக மிகமோசமாக பாதிக்கப்பட்டு புனரமைப்புச்செய்யப்படாமலிருந்துவந்த இருபெரும் வீதிகள் கார்ப்பட் வீதிகளாக புனரமைப்புச் செய்யப்படவுள்ளன என காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவித்தார்.

காரைதீவின் பெருவீதியான தேசிகர் வீதி மற்றும் மாவடிப்பள்ளி மயானவீதி என்பனவே இவ்வாறு " ஜ" திட்டத்தின்கீழ் புனரமைப்புச்செய்யப்படவுள்ளன.
இந்தவீதிகள் புனரமைப்புச்செய்யப்படவேண்டுமென கடந்த ஆண்டுகளில் இடம்பெற்றுவந்த பல பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டங்களில் பலதடவைகள்; வலியுறுத்தப்பட்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டு காரைதீவு பிரதேச சபையால் உள்ளுராட்சி ஆணையாளருக்கு காரைதீவு தேசிகர் வீதி 0708101112 மாவடிப்பள்ளி மயானவீதி கரீம் வீதி மீரா வீதி மத்தியவீதி ரகுமானியா வீதி போன்ற வீதிகளை புனரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை முன் வைக்கப்பட்டது.அது சில அரசியல் காரணங்களால் இதுவரை காலமாக இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்தது .

ஆனால்  நாம் தொடர்ச்சியாகக் கொடுத்துவந்த அழுத்தம் காரணமாக எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லாமல் உலக வங்கியின் நிதி உதவியினூடாக இவ் இரு வீதிகளும் அடுத்த மாதம் காப்பெட் வீதிகளாக புனரமைப்பு செய்யப்பட உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

(காரைதீவு நிருபர்)


Comments