06.09.18- அரைமணிநேரம் தாமதித்து அலறிய ஆழிப்பேரலை அலாரம்..

posted Sep 5, 2018, 6:16 PM by Habithas Nadaraja
காரைதீவில் சுனாமி அனர்த்த ஒத்திகைக்கான அலாரம்  (05.09.2018) அரைமணிநேரம் தாமதித்தே அலறியது.

இவ் ஒத்திகை நிகழ்விற்கென காரைதீவு இராணுவமுகாம் பொறுப்பதிகாரி கோவிந்த கல்முனைப்பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத் அனர்த்தமுகாமைத்துவ காரைதீவு பிரதேசசெயலக இணைப்பாளர் மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் இன்று காலை  8மணியிலிருந்து காத்திருந்தனர்.

ஆனால் பொதுமக்களோ இதையிட்டு  சற்றும் அலட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் நாளாந்த செயற்பாட்டில் ஈடுபட்டவண்ணமிருந்தனர்.
இன்று 8.30மணிக்கு ஒத்திகை அலாரம் அடிக்கும் என முதல்நாள் இரவு ஊர்பூராக ஒலிபெருக்கிமூலம் அறிவிப்புச்செய்யபட்டிருந்தது.
எனினும் காலை 9மணிக்கே அலாரம் அலறியது.

இதுதொடர்பாக மாவட்ட அனர்த்தமுகாமைத்து இணைப்பாளரிடம்கேட்டபோது கொழும்பிலிருந்து அறிவித்தல்வரை காத்திருக்கநேரிட்டது என்றார்.

(காரைதீவு  நிருபர்)
Comments