06.09.18- இடை நிறுத்தப்பட்ட வீதிபுனரமைப்பு பணிகள் மீண்டும் ஆரம்பம்..

posted Sep 5, 2019, 6:43 PM by Habithas Nadaraja   [ updated Sep 5, 2019, 6:44 PM ]
காரைதீவில் முறைப்படி அனுமதிபெறாமல் அமைக்கப்பட்டதாகக்கூறி தவிசாளரால் இடைநிறுத்தம் செய்யப்பட்ட சித்தானைக்குட்டி வீதியின் புனரமைப்புப்பணிகள் நேற்று மீண்டும் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

வீதிஅபிவிருத்தித்திணைக்களம் இப்பாதையை கொங்கிறீட்வீதியாக புனரமைப்புச்செய்யமுற்பட்டவேளை பிரதேசசபைக்குரிய வீதியை பிரதேசசபையின் அனுமதி பெறாமல் செய்யதமை தொடர்பிலும் வேலையில் திருப்பதியின்மைதொடர்பில் பொதுமக்கள் தெரிவித்த முறைப்பாடுகளினடிப்படையிலும் குறித்த வீதிப்புனரமைப்புப்பணிகள் தவிசாளரால் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

வீதிஅபிவிருத்தித்திணைக்கள பொறியயலாளர்கள் நேற்றுமுன்தினம் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறிலைச் சந்தித்து குறித்த வீதிப்புனரமைப்பு தொடர்பாக கலந்துரையாடினர்.

மக்களுக்கான நிலையான அபிவிருத்தித்திட்டங்களுக்கு நானொருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை. ஆனால் எதுவும் முறைப்படி செய்யப்படவேண்டும். எனவே குறித்த சித்தானைக்குட்டி ஆலயத்திற்குச்செல்லும் வீதி தொடர்பில் அயலிலுள்ள பொதுமக்கள் விழிப்புடன் சரியான முறைப்பாடுகளை சரியான நேரத்தில் தெரிவித்திருந்தனர். அவை நிவர்த்திசெய்யப்படும்பட்சத்தில் அதனைத்தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தவிசாளர் ஜெயசிறில் தெரிவித்தார்.

அதன்பின்னர் இருசாராரும் கலந்துரையாடி சமரசத்திற்கு வந்த பிற்பாடு வீதிப்புனரமைப்புப்பணிகள் நேற்று இருதரப்பினரின் கண்காணிப்பில் மீண்டும் ஆரம்பமாகியிருக்கிறது.

காரைதீவு  நிருபர்

Comments