06.09.19- சைவமும் தழிழும் தளைத்தோங்கும் காரைதீவுப் பதினிலிருந்து மண்டூர்பதி திருத்தல பாதையாத்திரை..

posted Sep 5, 2019, 6:32 PM by Habithas Nadaraja
கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 30 கிலோமீற்றர் தூரத்தில் இயற்கை அழகு செறிந்த தில்லை மரங்கள் அடர்ந்த காட்டில்  இளந்தென்றல் மெய்யலென வீசும் அமைதியான சூழலில் தானாக அடியார்களுக்கு அருள்   பாலிப்பதற்காக வந்துதித்து அருள்பாலித்து கொண்டிருக்கும் சின்னக்கதிர்காமம்என்று அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடார்ந்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.


இவ் உற்சவத்தை முன்னிட்டு வழமை போல இம்முறையும் காரைதீவு இந்து விருத்தி சங்கத்தின்ரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாதையாத்திரையானது சைவமும் தழிழும் தளைத்தோங்கும் பூண்ணிய பூமியாம் காரைதீவுப்பதினிலிருந்து அதிகாலை வேளையில் காரைதீவு மாவடிக் கந்த சுவாமி ஆலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் விஷேட பூசை வழிபாடுகளின் பிற்பாடு ஆலயத்திலிருந்து புறப்பட்டு கல்முனை, நற்பட்டிமுனை, சேனைக்குடிருப்பு, நாவிதன்வெளி, வேப்பயடி, தம்பலவத்தையுடாக பல மையில்களை கடந்து  மண்டூர்பதியினை சென்றடையவுள்ளது.


Comments