06.10.17- காரைதீவில் 37 மாணவர்கள் சித்தி..

posted Oct 5, 2017, 7:29 PM by Habithas Nadaraja
கல்முனை வலயத்திலுள்ள காரைதீவுக் கோட்டத்தில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 37மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர்.

காரைதீவு இ.கி.சங்க பெண்கள் பாடசாலையில் 14பேரும் காரைதீவு இ.கி.சங்க ஆண்கள் பாடசாலையில் 10பேரும் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் 5பேரும் மாவடிப்பள்ளி அல்அஸ்ரப் மகா வித்தியாலயத்தில் 5பேரும்  காரைதீவு விஸ்ணுவித்தியாலயத்தில் 2பேரும் காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்தில் ஒருவருமாக  மொத்தம் 37பேர் சித்திபெற்றுள்ளனர்.

சண்முகா மகாவித்தியாலயத்தின் வரலாற்றுச்சாதனையாக இம்முறை பெறுபேறு கருதப்படுகின்றது.கல்முனை முஸ்லிம்கோட்டத்தில் 130மாணவர் சித்தி!

இதேவேளை கல்முனை வலயத்திலுள்ள கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் இம்முறை 130 மாணவர் சித்திபெற்றுள்ளனர்.
இந்த 130 பேரில் 102பேர் மருதமுனையைச்சேர்ந்த பாடசாலைகளில் இருந்து தெரிவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 (காரைதீவு  நிருபர் சகா)


Comments