06.11.17- காரைதீவு பிரதேச செயலக பிரிவில் சுனாமி அனர்த்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்வு..

posted Nov 5, 2017, 5:03 PM by Habithas Nadaraja
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் நேற்றைய தினம்(05.11.2017) தேசிய சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்வு நாடு பூராகவும் உள்ள கரையோர மாவட்ட பிரதேசங்களில் இடம் பெற்றது.

அம்பாரை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச செயலக பிரிவில் பிற்பகல் வேளையில் பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது.

காரைதீவு சுனாமி எச்சரிக்கை கோபுரத்தில் இருந்து அபாயஒலி அறிவித்தல் ஒலிபரப்பப்பட்டவுடன் காரைதீவு-03 காரைதீவு-04 மாளிகைக்காடு கிழக்கு பொது மக்கள் தங்கள் உறவுகளுடன் ஒடிவந்து காரைதீவு பெண்கள் பாடசாலையில் தங்குவது போல செயற்பட்டதுடன் பொது மக்களுக்கு சுனாமி தொடர்பான தெளிவுட்டல் கருத்தரங்கும் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள்சமுர்த்தி  உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.  


Comments