06.11.18- தரணியில் தமிழர்வாழ்வு தலைநிமிர தீபாவளி வகைசெய்யவேண்டும்..

posted Nov 5, 2018, 6:09 PM by Habithas Nadaraja   [ updated Nov 5, 2018, 6:10 PM ]
தரணியில் தமிழர்வாழ்வு தலைநிமிர தீபாவளி வகைசெய்யவேண்டும்
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் ஜெயசிறில் வாழ்த்து..

துன்பம் என்ற இருள் நீங்கி இன்பமென்ற ஒளிதரும் இனிய தீபாவளித்திருநாள் தரணியில் தமிழர்வாழ்வு தலைநிமிர்ந்து சிறந்தோங்க வழிவகுக்கவேண்டும்.

என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தீபாவளி வாழ்த்துச்செய்தியில் தெரிவித்தார்.

அவரது செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலகெங்கும் வாழுகின்ற இந்துக்கள் கொண்டாடுகின்ற இத் தீபாவளிப்பண்டிகையானது பல அர்த்தங்கள் நிறைந்த ஆன்மீகக்கருத்துக்களைக்கொண்ட பண்டிகையாகும்.

மனிதகுலத்திற்கு தொல்லைகொடுத்துவந்த அசுரன் இறந்த நாளைக்கொண்டாடும் இந்நாளில் எமது தமிழ்ச்சமுகத்திற்கு தொல்லை தந்துகொண்டிருக்கின்ற எத்தனையோ நரகாசுரன்களைக்காண்கிறோம். அவர்களெல்லாம் பலமிழக்கின்றபோது தான் எமது தமிழ்ச்சமுகம் பலமடையும். அப்போதுதான் எமக்கு உண்மையான தீபாவளி.

தமிழர்க் தமிழினம் எதிரியால் வீழ்த்தப்பட்டதல்ல மாறாக துரோகிகளால் வீழ்த்தப்பட்ட இனம் என்பதை மறந்துவிடக்கூடாது.அந்ததுரோகிகள்தான் நராகசுரன்களாக வலம்வருகிறார்கள்.தமிழர்க் கெதிரான நரகாசுரன்களை பலமிழக்கச்செய்வதானால் நாம் ஒற்றுமைப்படவேண்டும். இறைவனிடம் வேண்டவேண்டும்.அதற்கு இன்றைய தீபாவளித்திருநாள் வகைசெய்யவேண்டும். 

காரைதீவு  நிருபர் 


Comments