07.01.19- காரைதீவு திருமால்முக வீதிக்கே இந்த நிலையா..

posted Jan 6, 2019, 5:17 PM by Habithas Nadaraja
காரைதீவு திருமால்முக வீதி குண்டும் குழியுமாக போக்குவத்திற்குப்பொருத்தமில்லாமல் காணப்படுகின்றது. நந்தவனசித்திவிநாயகர் ஆலயத்தையும் மகாவிஸ்ணு ஆலயத்தையும் இணைக்கும் 400மீற்றர் தூர இவ்வீதியில் குளவெளி மீள்குயேற்றக்கிராமம் மற்றும் காரைதீவு பிரதேசசபையின் விபுலாநந்த கலாசார மண்டபம் பிரதானநீர்த்தாங்கி உள்ளிட்ட முக்கிய பொது அமைப்புகளும் உள்ளன. மழைகாலத்தில் இவ்வீதியை அறவே பயன்படுத்தமுடியாது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என குடியிருப்பாளர்களும் பயணிகளும் கோரிக்கைவிடுக்கின்றனர்.

 காரைதீவு  நிருபர் Comments