07.02.19- காரைதீவு ஆதிசிவன் ஆலய புனர் நிர்மாணத்திற்கான உதவி கோரல்..

posted Feb 6, 2019, 5:50 PM by Habithas Nadaraja   [ updated Feb 6, 2019, 5:52 PM ]
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் பிறந்த மண்ணாம் காரைதீவிலே தெற்கு எல்லைப்புறத்தில் வீற்றிருந்து காவல் தெய்வமாக அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஆதி சிவன் ஆலயமானது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எந்தவித அபிவிருத்தியும் இன்றி தற்காலிக கட்டித்தில் இயங்கிக் கொண்டு வருகின்றது.

தற்போது இவ் எல்லைப்புற ஆலயத்தினை பலமான அடித்தளத்துடன் திடமாக அமைக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது. எனவே  கிராம நலன் விரும்பிகள் இளைஞர் யுவதிகள் ஒன்று சேர்ந்து இவ் ஆலயத்தை புனநிர்மாணம் செய்யவும் எல்லைப் புறத்தை வலுவடையச் செய்யவும் தீர்மானித்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இத் தருணம் எம்மனவர் மண்ணில் ஆர்வமுடைய நலன் விரும்பிகள் வெளிநாடுவாழ் தமிழ் உறவுகள் தனவந்தர்கள் போன்றோரிடமிருந்து உதவிகளைப் பொருளாகவோ அல்லது பணமாகவோ வழங்குமாறு சிரந்தாழ்த்தி வேண்டி நிற்கின்றனர், நிர்வாக சபையினர்.

தொடர்புகளுக்கு : 0777866476, 0757501393
                                  : 0771677883(Whatsup, viber, imo)

கணக்கு இல :223-2-001-8-0009472

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்......Comments