07.06.19- காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில், தீமிதிப்பிற்கான முன் ஆயத்த நிகழ்வுகள்..

posted Jun 6, 2019, 4:39 PM by Habithas Nadaraja
செந்நெல்லும் செந்தமிழும் சிறந்து விளங்கும் பழம்பெரும் பதியான காரைதீவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு உற்சவமானது 29.05.2019 அன்று கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி பூசைகள் நடைபெற்று ,அதாவது 07.06.2019 அன்று காலை தீமிதிப்பு நிகழ்வுடன் நிறைவுறவுள்ளது. இதற்கு, முன் ஆயத்தமாக 06.06.2018 பிற்பகல் தீ மிதிப்பவர்களுக்கான  பூணூல் போடும் நிகழ்வு நடைபெற்றதுடன், நோக்கு சோறு கட்டும் நிகழ்வும், மாலையில் தீக்குளி வெட்டுதல், இரவு தீ மூட்டுதல் நிகழ்வு என்பன நடைபெற்றன. இதன்போது பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments