07.08.17- காரைதீவு மாவடிக்கந்த சுவாமி ஆலய தீர்த்த உற்சவம் இன்று ஊர்எங்கும் விழாக் கோலம்..

posted Aug 7, 2017, 4:45 AM by Habithas Nadaraja   [ updated Aug 7, 2017, 4:49 AM ]
கிழக்கிலங்கை வரலாற்று புகழ்மிக்க காரைதீவு ஸ்ரீ மாவடிக்கந்த சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 24.07.2017ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்று இறுதி நாளாகிய இன்று 07.08.2017தீர்த்த உற்சவம் நடைபெற்றது.

காலையில் எம்பெருமான் ஆலயத்திலிருந்து தீர்த்த உற்சவத்துக்காக புறப்பட்டு தேரோடும் வீதி வழியாக அடியவர்களின் காவடிகள் முன்னே செல்ல வலம் வந்து சமுத்திரத்தை வந்தடைந்து தீர்த்தோற்சவம் மிகவும் பக்த்தி பூர்வமாக நடைபெற்றது. இன் நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.

Comments