07.09.19- இன்று காரைதீவிலிருந்து மண்டூர்பதிக்கு திருத்தல பாதயாத்திரை..

posted Sep 7, 2019, 6:21 AM by Habithas Nadaraja   [ updated Sep 7, 2019, 9:45 AM ]
கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான சின்னக்கதிர்காமம்என்று அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தையொட்டி  காரைதீவிலிருந்து இன்று(07.09.19)  அதிகாலை 4மணிக்கு  மண்டூரை நோக்கிய  பாதயாத்திரையொன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

மண்டூர் முருகனாலய வருடாந்த திருவிழா சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

இவ் உற்சவத்தை முன்னிட்டு வழமை போல இம்முறையும் காரைதீவு இந்து விருத்தி சங்கத்தின்ரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாதையாத்திரையானது சைவமும் தழிழும் தளைத்தோங்கும் பூண்ணிய பூமியாம் காரைதீவுப்பதினிலிருந்து அதிகாலை வேளையில் காரைதீவு மாவடிக் கந்த சுவாமி ஆலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் விஷேட பூசை வழிபாடுகளின் பிற்பாடு ஆலயத்திலிருந்து புறப்படவுள்ளது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இப்பாதயாத்திரை கல்முனை நற்பட்டிமுனை சேனைக்குடிருப்பு நாவிதன்வெளிவேப்பயடி தம்பலவத்தையுடாக பல மைல்கள்  கடந்து  மண்டூர்பதியினை சென்றடைந்தது.



Comments