07.09.19- இன்று மின்சாரம் தாக்கியதில் காரைதீவுமாணவி பலி..

posted Sep 7, 2019, 6:09 AM by Habithas Nadaraja   [ updated Sep 7, 2019, 6:56 AM ]
மின்சாரம் தாக்கியதால் காரைதீவைச்சேர்ந்த 17வயது மாணவியொருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இச் சோகசம்பவம் இன்று(07.09.2019) காலை சம்பவித்துள்ளது.

காரைதீவு.10ஆம் பிரிவைச்சேர்ந்த நடேஸ்வரராஜன் அக்ஷயா என்ற மாணவியே இவ்விதம் பலியானவராவார்..

இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் க.பொ.த.உயர்தர உயிரியல் விஞ்ஞானப்பிரிவின் முதலாம்வருடத்தில் பயின்றுவருபவராவார்.

குடும்பத்தில் இருபிள்ளைகள். மூத்தவன் பல்கலைக்கழகத்தில் பயில்கிறார். இளையவள் அக்ஷயா.

இன்று காலை கல்முனையிலுள்ள தனியார் கல்வியகத்திற்குச் செல்வதற்காக நீராடிவிட்டு தலையை காற்றில் உலரவைக்கும்பொருட்டு மின்விசிறியின் ஆளியை தொட்டபோது அங்கு இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாமென அவரது தந்தையார் நடேசுவராராஜன் தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்ற வீட்டின் வெளிபல்ப் எரிந்துகொண்டிருந்தது.

சம்பவத்தைகேள்வியுற்றதும்தனியார் கல்வியகம் சடுதியாக வகுப்புகளை மூடிவிட்டு அனைத்துமாணவர்களும் விரிவுரையாளர்களும் காரைதீவுக்கு வந்தனர்.கல்முனை உவெஸ்லி கல்விச்சமுகமும் விரைந்தது.நீண்டகாலத்திற்கு பிறகு மின்சாரத்தால் ஏற்பட்ட மரணம்இது என்பதால் ஊரே சோகமயமானது.

இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறைப் பொலிசார் விசாரணை செய்துவருகின்றனர்.


(காரைதீவு  நிருபர் சகா)

Comments