07.10.18- காரைதீவு வரலாற்றில் 191 புள்ளிகள் பெற்று கஜருக்‌ஷன் சாதனை..

posted Oct 6, 2018, 7:18 PM by Habithas Nadaraja
காரைதீவு வரலாற்றில் 191 புள்ளிகள் பெற்று கஜருக்‌ஷன் சாதனை புலமைப்பரிசில் பரீட்சையில் 
காரைதீவில் 26மாணவர்கள் சித்தி.. 

நடைபெற்று முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் காரைதீவுக்கோட்டத்திலுள்ள காரைதீவுப் பாடசாலைகளில் 26மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்திபெற்றுள்ளனர்.

காரைதீவுக் கோட்டத்தில் அதிகூடிய புள்ளியை காரைதீவு இராமகிருஸ்ணமிசன் ஆண்கள் பாடசாலை மாணவன் கேந்திரமூர்த்தி கஜருக்‌ஷன் 191 புள்ளிகளை பெற்று காரைதீவுக்கோட்டத்தில்  முன்னிலையில் உள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் 7ம்இடத்தை பெற்றுள்ளார்.

சம்மாந்துறைவலயக்கல்விப்பணிமனையின் கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தியின்  புதல்வன் கஜருக்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைதீவுக்கோட்ட வரலாற்றில் இதுவரைகாலமும் இல்லாத வரலாற்றை 191புள்ளிகள் பெற்று கஜருக்சன் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளார்.

காரைதீவு பாடசாலைகளில் மாணவர்கள் சித்தி அடைந்த விபரம் வருமாறு-:
இ.கி.மிசன் பெண்கள் பாடசாலை- 09 மாணவிகளும் இ.கி.மிசன் ஆண்கள் பாடசாலை 04 மாணவர்களும் சண்முகா மகா வித்தியாலயத்தில் 04 மாணவர்களும் கண்ணகி வித்தியாலயத்தில் 02 மாணவர்களும்விஷ்னு வித்தியாலயத்திலும்  விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் தலா ஒருவர் வீதம் இருவர்சித்தி பெற்றுள்ளனர்.காரைதீவுக்கோட்டத்திற்குட்பட்ட  மாளிகைக்காடு அல்ஹூசைன் வித்தியாலயத்தில் 3மாணவர்களும் மாடிப்பள்ளி அல்அஸ்ரப் மகாவித்தியாலயத்தில் 2மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

வழமைக்குமாறாக இம்முறை காரைதீவில் குறைவான எண்ணிக்கையில் சித்திபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

காரைதீவு  நிருபர் Comments