08.01.19- புதிய நிருவாகசபையினர் துரைரட்ணசிங்கம் எம்பியுடன் சந்திப்பு..

posted Jan 7, 2019, 4:52 PM by Habithas Nadaraja
காரைதீவு தென்கோடியில் அமர்ந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஆதிசிவன் ஆலயத்தின் புதிய நிருவாகசபையினர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கே.துரைரெட்ணசிங்கத்தைச் சந்தித்துக்கலந்துரையாடினர்.

திருகோணமலை சென்ற புதிய நிருவாகசபையின் தலைவர் செ.புவனேந்திரன் செயலாளர் த.செல்லத்துரை ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கத்தைச் சந்தித்து ஆலய அபிவிருத்தி தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடினர்.

ஆலயத்தின் பூர்வீக அமைவிடம் மற்றும் அபிவிரு;ததி செய்யப்படவேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறினர். அத்துடன் அங்கு விஜயம்செய்யுமாறு அழைப்பும் விடுத்தனர்.

தாம் அதன் அவசியத்தை உணருவதாகவும் அதற்கான முடிந்த உதவியைச் செய்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்தார்.

15வருடங்களுக்குப்பிறகு புதிதாக தெரிவான நிருவாகசபையில் தலைவராக செ.புவனேந்திரன் செயலாளராக த.செல்லத்துரை பொருளாளராக சீ.துரைராசா உபதலைவராக தெ.தேவசுதன் உபசெயலாளராக கே.லோகநாதன் நிருவாகசபை உறுப்பினர்களாக கே.மதியழகன் மு.வடிவேல் த.கிருபராஜா சி.நீதன் ஜெ.தனுஸ்காந்த் கே.தயாபரன் ஆகியோர் தெரிவாகியிருந்தனர்.

காரைதீவு நிருபர் 
Comments