08.02.19- நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தெரிவு செய்தல்..

posted Feb 7, 2019, 5:18 PM by Habithas Nadaraja
நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகளை காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான காணிக் கச்சேரி நேர்முகத் தேர்வு காரைதீவு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன்  தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட உதவி காணி ஆணையாளர்களான திருமதி.தக்சிலா குணரத்னஇ ஜனாபா . இப்திகார் பானு அவர்களும் அம்பாறை மாவட்ட காணி உத்தியோகத்தர். கே.எல்.எம். முஸம்மில் அவர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துடனர்.

 காரைதீவு  நிருபர் 
Comments