08.02.20- காரைதீவு அருள்மிகு பாலையடி வாலவிக்னேஸ்வர ஆலய கும்பாபிஷேக நிகழ்வு..

posted Feb 7, 2020, 8:53 PM by Habithas Nadaraja   [ updated Feb 7, 2020, 9:14 PM ]
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் ஆறாவது புனராவர்த்தன அஸ்டபந்தன மகாகும்பாபிசேகம் நேற்று  07.02.2020ஆம் திகதி  சுபவேளையில் கோலாகலமாக நடைபெற்றது.

கும்பாபிசேக கிரியைகள் யாவும் பிரதமகுரு சிவாகமபானு விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் நடைபெற்து. நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பிரதான இராசகோபுரம் உள்ளிட்ட அனைத்து பரிவாரமூத்திகளுக்கும் கும்பாபிசேகம் நடைபெற்றது. பக்தர்களின் அரேஹரா கோசம் விண்ணைப்பிளக்க பிரதான கலசத்தில் நீர் சொரியப்பட்டது. குருமாரின் வழிகாட்லில் பக்தர்கள் சிறப்பாகத்தொழிற்பட்டனர்.

கடந்த 2004.05.02ஆம் திகதி இறுதியாக ஜந்தாவது மகாகும்பாபிசேகம் நடைபெற்றநிலையில் 16வருடங்களுக்குப்பின் நேற்று  ஆறாவது மகாகும்பாபிசேகம் நடைபெறுகின்றது.

 06.02.2020ஆம் திகதி  எண்ணெய்க்காப்பு சாத்தும் கிரியை காலைமுதல் நடைபெற்றது. நேற்று காலை முதல் மாலை வரை நடைபெறவிருக்கும் இக்கிரியையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மகா கும்பாபிசேகம்  07ஆம் திகதி காலை 8.57மணிமுதல் 10.09மணி வரையான சுபமுகூர்த்தவேளையில் நடைபெற்றத து.கும்பாபிசேகத்துடன்  திரிதள ராஜகோபுரம்  பாலையடி வாலவிக்னேஸ்வருக்கு ஆறாவது மகா கும்பாபிசேகம் குடமுழுக்கு பெருஞ்சாந்திவிழாவும் நடைபெற்றது.

அதற்கு முன்னோடியாக முதலாந்திகதி(01.02.2020) கர்மாரம்பத்துடன் கும்பாபிசேகக்கிரியைகள் ஆரம்பமாகின. கலசபூஜைகள் திருவிளக்குப்பூஜைகள்  எண்ணெய்காப்பு என்பனவும் நடைபெற்றுவந்தன.

Comments