08.02.21- காரைதீவில் மூடப்பட்ட 3பாடசாலைகள் இன்று திறப்பு..

posted Feb 7, 2021, 5:42 PM by Habithas Nadaraja
கல்முனை சுகாதாரப்பிராந்தியத்திலுள்ள காரைதீவில் ஏழு மாணவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து மூடப்பட்ட மூன்று பாடசாலைகளும் இன்று(08.02.2021) திறக்கப்படவிருக்கிறது என காரைதீவுப்பிரதேசசுககாதாரவைத்தியஅதிகாரி டொக்டர் தஸ்லிமா பசீர் தெரிவித்தார்.

கடந்த 29ஆம் திகதி  தொடக்கம் ஒருவாரகாலத்திற்கு இம்மூன்று பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தமை தெரிந்ததே.

சுகாதாரத்துறையினரின் பரிந்துரைக்கேற்ப காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி சண்முகா மகா வித்தியாலயம் இ.கி.மி.பெண்கள் பாடசாலை ஆகிய 3 பாடசாலைகளே இவ்விதம் மூடப்பட்ட பாடசாலைகளாகும்.குறித்த பாடசாலைகளுக்கு நேற்று(07.02.2021)  சுகாதாரவைத்தியஅதிகாரிபணிமனையினால் தொற்றுநீக்கி வீசப்பட்டது.

இதுவரை காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் ஜந்துமாணவர்களும்  இ.கி.மி.பெண்கள் பாடசாலை மற்றும் விபுலாநந்தா மத்திய கல்லூரியில் தலா ஒரு மாணவரும் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.

முன்னெச்சரிக்கையாகவே இவ்விதம் பாடசாலை மூடப்பட்டதாகவும் அதன்பிறகு எந்தவொரு மாணவருக்கும் தொற்று ஏற்படவில்லை. தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் யாரும் அஞ்சத்தேவையில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

( வி.ரி.சகாதேவராஜா)


Comments