08.07.18- ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் மாபெரும் சித்தர் ரதபவனி ஊர்வலம்..

posted Jul 7, 2018, 6:03 PM by Habithas Nadaraja
பன்னெடுங்காலமாக​ ஈழமணித் திருநாடெங்கும் நடமாடி சித்துக்கள் பல​ புரிந்து காரைதீவு பதியில் ஜீவ​ சமாதி அடைந்த​ ஸ்ரீ
சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 67வது குருபூசை தின நிகழ்வினை முன்னிட்டு சரியை,கிரியை,யோகம்,ஞானம் எங்கும் மேல் ஒங்க​ இசை,நடனம்,பரதம்,கூத்து,கும்மி என்பன​ ஆரவாரிக்க​ அடியவர்கள் பஜனை பாடிட​ சித்தர் ரதபவனி  (06.07.2018)ம் திகதி  வெகுசிறப்பாக நடைபெற்றது.

காரைதீவு வீதியெங்கும் அழகாக சோடனைசெய்யப்பட்டிருந்தது. கொம்புச்சந்தியில் பாரிய அலங்காரப்பந்தல் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அங்கு விசேடவரவேற்பு இடம்பெற்றது.

வழிநெடுகிலும் மக்கள் சித்தர் பவனியை நிறைமுட்டிவைத்து வரவேற்றார்கள். பாடசாலை மாணவர்களும் வரவேற்றனர்.
25 உழவு இயந்திரங்களில் சித்தர் பக்தர்கள் நந்திக்கொடியுடன் பயணிக்க பின்னே ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் திருவுருவப்படம் தாங்கிய ரதம் பவனிவந்தது கண்கொள்ளாக்காட்சியாகவிருந்தது.

காலையில் சித்தராலயத்தில் விசேடபூஜையுடன் ரதபவனி 7.45மணியவில் ஆரம்பமாகியது. நூற்றுக்கணக்கான சித்தர் பக்தர்கள் உழவுஇயந்திரங்களிலும் ரிப்பரிலும் நந்திக்கொடியுடன் பயணித்தனர்.

காரைதீவிலிருந்து காலை 7.45மணியளவில் ஆரம்பமாகிய இவ் ரதபவனி கல்முனை சேனைக்குடியிருப்பு கிட்டங்கி நாவிதன்வெளி வேப்பையடி ஊடாக மண்டுரைச்சென்றடைந்தது.

இடையில் ஆலயங்களில் விசேடபூஜை ஏற்பாடாகியிருந்தது. அம்பலத்தடிப்பிள்ளையார் ஆலயத்தில் பக்தர்களுக்கு காலை ஆகாரம் வழங்கப்பட்டது.

பின்னர் பிற்பகில்  வேப்பையடி வீரமுனை சம்மாந்துறையூடாக காரைதீவை வந்தது.காரைதீவு ஸ்ரீசித்தானைக்குட்டி ஜீவசமாதி ஆலயமும் இந்துசமய விருத்திச்சங்கமும் இணைந்து ரதபவனிக்கான ஏற்பாட்டைச்செய்திருந்தது.



Comments