09.04.20- காரைதீவில் கேஎஸ்ஸி உலருணவுப்பொதி விநியோகம்..

posted Apr 8, 2020, 6:21 PM by Habithas Nadaraja
கொரோனா நெருக்கடிக்குள்ளான வசதிகுறைந்த மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் திட்டத்தை காரைதீவு விளையாட்டுக்கழகம் கேஎஸ்ஸி- மற்றும் விபுலாநந்தா சனசமுக நிலையம் என்பனஇணைந்து அம்பாறை மாவட்டத்தில் 07.04.2020காரைதீவில் ஆரம்பித்தன.
 
கழகத்தின் தலைவர் கிருஸணபிள்ளை சசிகரபவவான் தலைமையில் செயலாளர் வெற்றிவேல் உதயகுமரன் சகிதம் 
07.04.2020 காரைதீவு-8 ஆம் பிரிவில் பிரதேசசெயலரின் தெரிவுப்பட்டியலுக்குட்பட்ட மக்களுக்கு 50உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கழகத்தின் போசகர்களுள் ஒருவரான கழகமுன்னாள்தலைவரும் சமுகசேவையாளருமான வி.ரி.சகாதேவராஜா முன்னாள் தலைவர் உ.ரஜிநாதன் உள்ளிட்ட பலரும் பொதிகளை வழங்கிவைத்தனர்.

காரைதீவு பிரதேசசெயலரின் தெரிவுப்பட்டியலின் இடம்பெற்றுள்ள மக்களுக்கு கிராமசேவை உத்தியோகத்தர்  வி. ஜெகதாஸ் திருமதி வி. ஜெயரதி   பயிலுனர் கே.ஜெகராஜ் முன்னிலையில் இப்பொதிகள் முறைப்படி வழங்கிவைக்கப்பட்டன.
Comments