10.03.18- தரம் 5 புலமைப்பரிசில் பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளல்..

posted Mar 9, 2018, 6:02 PM by Habithas Nadaraja
காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூகசேவை ஒன்றியமானது வருடா வருடம் காரைதீவு பிரதேசத்தில் இருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை பரீட்சைக்கு தயார் செய்யும் இலவச வகுப்புகளை நடாத்துவது தாங்கள் அறிந்த விடயமே. அந்த வகையில் 2018ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை மிகவும் சிறப்பான முறையில் 2018.03.17ம் திகதி முதல் நடாத்த தீர்மானித்துள்ளோம்.

எனவே இச் சேவையை சிறப்புற நடாத்துவதற்கு தங்கள் பாடசாலையின் தரம் 5 மாணவர்களை எமது பயிற்சி வகுப்புக்களுக்கு சமூகமளிக்கச் செய்து ஒத்துழைப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
                            
குறிப்பு :-
11.03.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு விபுலாநந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் பெற்றோருக்கான கூட்டம் இடம்பெற இருப்பதால் மாணவர்களின் பெற்றோர்களை மாத்திரம் இக் கலந்துரையாடலுக்கு சமூகமளிக்க செய்யவும்.

தொடர்புக்கு :- 0774576014Comments