10.03.18- தூய்மையான உள்ளத்தையே இறைவன் விரும்புகின்றார்..

posted Mar 9, 2018, 6:16 PM by Habithas Nadaraja   [ updated Mar 9, 2018, 6:17 PM ]
தூய்மையான உள்ளத்தையே இறைவன் விரும்புகின்றார்!
காரைதீவில் சபரிமலை சாஸ்தாபீட தலைவர் சிவஸ்ரீ ஜயப்பதாசக்குருக்கள் 

உள்ளக்கமலமடி உத்தமனா ர் வேண்டுவது என்று இந்த மண்ணில் பிறந்த சுவாமி விபுலானந்த அடிகள் அழகாக கூறியிருந்தார். உண்மையில் தூய்மையான பரந்துவிரிந்த உள்ளத்தையே இறைவன் விரும்புகின்றான்.

இவ்வாறு  காரைதீவுக்கு விஜயம்செய்த சபரிமலை சாஸ்தாபீட தலைவர் சிவஸ்ரீ ஜயப்பதாசக்குருக்கள் இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையில் அருளுரையாற்றுகையில் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் செ.மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இவ்வமர்வில் குருக்கள் மேலும் கூறுகையில்:
இந்த மண்ணில் பிறப்பதற்கு மாதவம் செய்யவேண்டும். நீங்களெல்லாம் கடவுளின் குழந்தைகள். சுவாமிகள் உருவாக்கிய இந்தப்பாடசாலையில் பயில்வதற்கு புண்ணியம்செய்திருக்கவேண்டும்.

இந்துசமயத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள். அதிலும் பெண்தான்முதலிடம்.

கல்விக்கு அதிபதி சரஸ்வதித்தாயும் ஒரு பெண்தான். ஏன் வீரத்திற்க ஒரு ஆணை நியமித்தார்களா? இல்லை வீரத்திற்கும் ஒரு பெண்தான் அதிபதி அவர்தான் துர்க்கா அதேபோல செல்வத்திற்கும் பெண்தான் அதிபதி அவர் லக்ஸ்மி.
எனவே பெண்களுக்கு அதிமுக்கியத்துவம் கௌரவம் வழங்கப்பட்டுவந்திருக்கிறது.

அப்படிப்பட்ட பெண் பாடசாலையில் பயிலும் நீங்கள் தங்கள் குடும்பத்திற்கும் இந்தப்பாடசாலைக்கும் இந்த மண்ணிற்கும் பெருமைசேர்க்கவேண்டும். என்றார்.மாணவிகளிடம்  கேள்விகேட்டு பரிசளித்தார்.

(காரைதீவு  நிருபர் சகா)


Comments