10.05.19- பலத்த பாதுகாப்பின் மத்தியில் காரைதீவில் ஹெலியில் வந்திறங்கிய ஜனாதிபதி..

posted May 9, 2019, 6:15 PM by Habithas Nadaraja   [ updated May 9, 2019, 6:16 PM ]
பலத்த பாதுகாப்பின் மத்தியில் காரைதீவு விபுலாநந்தா மைதானத்தில் ஹெலியில் வந்திறங்கிய ஜனாதிபதி அவருக்காக காத்திரந்த விபுலாநந்தா மாணவரைப்பார்த்து கையசைத்தவண்ணம் காரில் ஏறினார்.

ஜனாதிபதி காரைதீவு மைதானத்தில் வந்திறக்குவதற்கான பாதுகாப்ப ஏற்பாடுகள் முதலநாளில் இருந்தே ஆரம்பமானது. சகலவீதிகளிலும் பொலிஸ் இராணுவம் விசேட அதிரடிப்படை என பலத்துபாதுகாப்பு. கடலிலும் கடற்படைப்படகுகள் கண்காணிப்பிலீடுபட்டன. உயரமான அத்தனை கட்டடங்களிலும் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஜனாதிபதி காலை 10.30மணிக்கந்து பிற்பகல் 2மணிக்கு செல்லும் வரை பாதுகாப்பு உச்சத்திலிருந்தது.காரைதீவிலிருந்து பிரதானவீதியூடாக பலத்தபாதுகாப்பின் மத்தியில் சாய்ந்தமருதுக்குச்சென்று பின்னர் மீண்டும் 2மணியளவில் காரைதீவுக்குவந்து ஹெலியில் பயணமானார்.

அதன்பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம் செய்து லீ மெரிடியன் மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பங்கேற்றார்.இந் நிகழ்வின் போது சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் வை.எம்.ஹனீபா ஜனாதிபதிக்கு நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அம்பாறை
மாவட்ட இளைஞர்கள் சார்பாக நினைவுச்சின்னம் வழங்கி கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம்கட்டமாக கல்முனை மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம் றஹீப்பின் வரவேற்பு உரையுடன் 1000 இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் காலை 11.00 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் மேல் மண்டபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம் ஹிஸ்புல்லாஹ் உரையாற்றும் போது இலங்கையில் ஏற்பட்ட தீவிரவாதத்தை இரு கிழமைக்குள் அழித்து முஸ்லீம் மக்களுக்கு ஆறுதல் ஒன்றை பெற்றுக்கொடுத்தமைக்காக நன்றியை தெரிவிப்பதாக அங்கு குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஜனாதிபதியின் உரை இடம்பெற்றதை அடுத்து குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதியிடம் இளைஞர்கள் யுவதிகள் தங்களது ஆதங்கங்களை குறிப்பிட்டு தீர்வுகளை வழங்குமாறு கேட்டனர்.தொடர்ந்து இளைஞர் யுவதிகளின் கருத்துக்களை செவிமடுத்த ஜனாதிபதி அதற்கு ஆக்கபூர்வமான பதில்களை வழங்கினார்.இதனால் சபையில் இருந்த இளைஞர் யுவதிகள் எதிர்கால ஜனாதிபதி என கோஷம் எழுப்பினர்

அத்துடன் அநேக இளைஞர்கள் கேட்டுக்கொண்ட சாய்ந்தமருதிற்கான தனி சபை விடயத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாக அழுத்தி கூறியதை அடுத்து மேலும் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அத்துடன் தீவிரவாத செயற்பாடுகளை முறியடிப்பதில் சாய்ந்தமருது மக்கள் அரசிற்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கிய ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி நன்றிகளை தெரிவித்து விடைபெற்றார்.
குண்டுவெடிப்புக்குள்ளான வீட்டையும் பார்வையிட்டார்.


காரைதீவு  நிருபர்Comments