10.07.18- காரைதீவு பெண்கள் வித்தியால மாணவர்களின் ஆக்கத்திறன் கல்வி கண்காட்சி..

posted Jul 9, 2018, 6:28 PM by Habithas Nadaraja   [ updated Jul 9, 2018, 6:30 PM ]
காரைதீவு இ.கி.மி பெண்கள் வித்தியாலய 90ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலை ஆசிரிய மாணவர்களுடன் இணைத்து பாடசாலை பழைய மாணவர்கள் இரண்டு நாட்கள்(09.07.2018,10.09.2018) ஏற்பாடு செய்த மாணவர்களின் ஆக்கத்திறன் வெளிப்பாட்டுக் கல்விக் கண்காட்சி நேற்றைய தினம் (09.07.2018) ஆரபித்து வைக்கப்பட்டது.இன் நிகழ்வுக்கு அதிதிகளாக காரைதீவு ஸ்ரீ நந்தவனப் பிள்ளையாராலய பிரதம குரு,பழைய மாணவசங்கத்தினர் பெற்றார் ஆசிரிய சங்கத்தினர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இக் கல்விக் கண்காட்சியில் பேண்தகு பாடசாலை அபிவிருத்தித் திட்டம், பிள்ளைநேயப் பாடசாலை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்,
EKSP Project, இடைநிலை பாடசாலை அபிவிருத்தி திட்டம், சைவம், வரலாறு, நடனம், ஆரம்ப பாடசாலை மாணவர்களின் கலைவண்ணங்கள், தமிழ், கணிதம், சங்கீதம், சுகாதாரம், கற்றல் வள நிலையம்,  சமூக விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், பொது போன்ற பல காட்சிக்கூடங்கள் மிகவும் அழகாக அமைந்திருந்தது.Comments