11.01.20- திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை 7ம் நாள் நிகழ்வு..

posted Jan 10, 2020, 7:26 PM by Habithas Nadaraja
காரைதீவில் வருடாவருடம் இடம்பெற்று வருகின்ற திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில்  சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்றது. 

அந்தவகையில் திருப்பள்ளியெழுச்சி 7ம் நாள் ஊர்வலமானது நேற்றைய தினம் 11.01.2020ம் திகதி அதிகாலை 4.00 மணியளவில்  காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி மட்டுப்படுத்தப்பட்ட தேரோடும் வீதிவழியாக காரைதீவு ஸ்ரீ  அருள்தரும் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாடுகளின் பின்னர்  காரைதீவு ஸ்ரீ ஆதிசிவன் ஆலயத்த சென்றடைந்து பூசை வழிபாடுகளின் பின்னர்  அறநெறிப்பாடசாலை மாணவர்களின் நற்சிந்தனை இடம்பெற்று திருவாசகம் முற்றோதல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு பின்னர்  மீண்டும்  கண்ணகை அம்மன் ஆலயத்தை வந்தடைந்ததுடன் நிறைவடைந்தது.
Comments