11.02.18- காரைதீவு மக்கள் தமிழ் தேசியத்துடன் என்பதை நிருபித்தது தேர்தல் முடிவு..

posted Feb 10, 2018, 6:36 PM by Habithas Nadaraja

உள்ளுராட்ச்சி  மன்ற தேர்தல் 2018 நேற்றைய தினம் (10.02.2018) நாடு பூராகவும் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

அம்பாரை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்கான வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தழிழ் தேசியக் கூட்டமைப்பு காரைதீவின் 4 வட்டாரங்களையும் கைப்பற்றி அமோக வெற்றியிட்டி காரைதீவின் பிரதேச சபையின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

காரைதீவு பிரதேச சபை தேர்தலில் இம் முறை பல கட்ச்சிகள் பல சுயேற்சைக் குழுக்கள் போட்டியிட்டது தேர்தல் களம் மிகவும் போட்டி நிறைந்ததாக காணப்பட்டது. இதன் காரணமாக தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை பிரதேச சபையின் ஆட்ச்சியை யார் அமைப்பார் என்பது தெரியாமல் இருந்தது. 

ஆனால் மீண்டும் தனது பலத்தை இலங்கை தழிழ் தேசியக் கூட்டமைப்பு நீருபித்து காட்டியிருக்கின்றது. வெளியாகியுள்ள காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் அடிப்படையில் காரைதீவு பிரதேச மக்கள் தமிழ் தேசியத்தின் பால் உள்ளனர் என்பதை மீண்டும் காட்டியுள்ளது.

காரைதீவிலுள்ள 7வட்டாரங்களும் தனி அங்கத்தவர் வட்டாரமாகும். காரைதீவு பிரதேச சபைக்கான உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் 11 ஆசனங்களை இலக்குவைத்து 6கட்சிகள் 2சுயேச்சைகள் வாயிலாக 112 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

கலப்புமுறைத்தேர்தலில்  வட்டாரமுறைத்தேர்தல் மூலம் நேரடியாக 7வட்டாரங்களுக்கும் 4தமிழர் 3முஸ்லிம்கள் உள்ளிட்ட 7பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

விகிதாசாரமுறை மூலமாக மீதி 4 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மொத்தமாக 11 பிரதிநிதிகள் காரைதீவுப்பிரதேச சபைக்காக தெரிவுசெய்யப்படவுள்ளனர்.Comments