11.03.18- காரைதீவு பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி..

posted Mar 10, 2018, 7:16 PM by Habithas Nadaraja
காரைதீவு பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்றைய தினம் காரைதீவு கனகரத்தினம் விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் செ.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.

சாரதாமணிஇல்லம், தாகூர்இல்லம் காதாம்பரிஇல்லம்ஆகிய மூன்று இல்லங்களாக மாணவர்களைப் பிரித்து இடம் பெற்ற இன் நிகழ்வில் மாணவர்களின் மெய்வலுனர் நிகழ்வுகள், கண்கவர் அணிநடை நிகழ்வுகள், உடற்பயிற்ச்சி நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் MR.M.Sஅப்துள் ஜலீல் பிரதம அதியாக கலந்து கொண்டார்.மற்றும் சிறப்பு அதிதிகள் பாடசாலை பழைய மாணவசங்க உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இடம்பெற்று முடிந்த அனைத்து நிகழ்வுகளிலும் மாணவர்கள் பங்கு பற்றி முதலாம் இடத்தை 149புள்ளிகளைபெற்று காதாம்பரிஇல்லமும் ,  இரண்டாம் இடத்தை 135 புள்ளிகளை பெற்று தாகூர்இல்லமும், மூன்றாம் இடத்தை 130 புள்ளிகளை பெற்று சாரதாமணிஇல்லமும்  பெற்றுக்கொண்டது.


Comments