11.05.18- மோகன் கணேஸ் ஞாபகாத்த மென்பந்து கிரிக்கெற் சுற்றுப் போட்டி..

posted May 10, 2018, 6:34 PM by Habithas Nadaraja
மோகன் கணேஸ் குடும்ப உறவுகளின் அனுசரனையுடன் காரைதீவு றிமைன்டர் விளையாட்டக் கழகம் பெருமையுடன் நடாத்தும் மோகன் கணேஸ் ஞாபகாத்த கிண்ண மாபெரும் மென்பந்து கிரிக்கெற் சுற்றுப் போட்டி. 

இச் சுற்றுப் போட்டியானது எதிர் வரும் 12.05.2018 முதல் நடைபெற்று இறுதிப்போட்டியானது எதிர் வரும் 29.05.2018 அன்று காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

இச் சுற்றுப் போட்டியில் காரைதீவு கல்முனை சம்மாந்துறை பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் விளையாட்டுக் கழகங்ள் பங்குபற்றகின்றன வெற்றிபெறும் கழகங்களுக்கு பெறுமதி வாய்ந்த வெற்றிக் கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

வருடா வருடம் நடைபெறும் இச் சுற்றுப் போட்டியானது இவ் வருடமும் சிறப்பான முறையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Comments