11.05.19- "நாட்டுக்காக ஒன்றிணைவோம்" காரைதீவில் தொடர்ந்து சிரமதானம்..

posted May 10, 2019, 7:18 PM by Habithas Nadaraja
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக் கருவில் 'நாட்டுக்காக நாம் ஒன்றிணைவோம்' தேசிய வேலைத்திட்டத்தின்கீழ் காரைதீவு பிரதேசசபை பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகிறது.பல இடங்களிலும் சிரமதானங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கடந்த 06.05.2019 திகதி முதல் 11.05.2019 ம்  வரை காரைதீவு பிரதேச சபையினால் பல்வேறு நிகழ்வுகள் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்  வழிகாட்லில் முன்னெடுக்கப்பட்டுவருகிகிறது.அந்த வகையில் நேற்று சிரமதான நிகழ்வுகள்  காரைதீவின் முக்கிய இடங்களில்  நடைபெற்றது.

பிரதேசசபை ஊழியர்கள் சமுர்த்தி பயனாளிகள் எனப்பலரும் மாபெரும் சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்  உள்ளிட்ட பெரும்பாலான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


காரைதீவு  நிருபர்Comments