12.01.20- திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலத்தின் இறுதி நாளாகிய திருவாதிரைத்தீர்த்த உற்சவ நிகழ்வு..

posted Jan 12, 2020, 2:02 AM by Habithas Nadaraja
காரைதீவில் வருடாவருடம் இடம்பெற்று வருகின்ற திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் திருப்பள்ளியெழுச்சி ஊர்வலத்தின் இறுதி நாளாகிய 10ம் நாள் ஊர்வலமானது 10.10.2020ம் திகதி அதிகாலை 4.00  மணியளவில் பல விக்கிரங்களுடனும் நாயன்மார்களுடனும் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்ட ரதங்களுடன் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து  ஆரம்பமாகி  தேரோடும் வீதிவழியாக   ஊர்வலம்மாக பாலையடி பாலவிக்கினேஸ்வரர்    ஆலயதுக்கு   சென்று பூசை வழிபாடுகள் இடம் பெற்றதுடன் அதனை தொடர்ந்து திருவாதிரைத்தீர்த்த  உற்சவத்துக்காக தேராடும் வீதி வழியாக சமுத்திரத்தை சென்றடைந்து திருவாதிரை தீர்த்த உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.Comments