12.01.22- கிழக்கில் கூட்டுறவுத்துறை தனிப்பெரும் துறையாக பரிணமிக்கும்..

posted Jan 11, 2022, 5:48 PM by Habithas Nadaraja   [ updated Jan 11, 2022, 6:14 PM ]
கிழக்கில் கூட்டுறவுத்துறை தனிப்பெரும் துறையாக பரிணமிக்கும்!
இவ்வாண்டில் சங்கம் தோறும் தனியார்கல்விநிலையங்கள் உருவாக்கப்படும்.
காரைதீவில் கிழக்குமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அஸ்மி நம்பிக்கை..


கிழக்கு மாகாணத்தில் கடந்தகாலங்களில் நலிவுற்றிருந்த கூட்டுறவுத்துறை இனிமேல் பாரிய வியத்தகு தி;ட்டங்களுடன் பலபரிமாணங்களுடன் தனிப்பெரும்துறையாக ஜொலிக்கும். அதற்காக மாகாணத்திலுள்ள சகல கூட்டுறவுச்சங்கங்களும் எம்முடன் ஒத்துழைத்து பயணிக்கவேண்டும்.

இவ்வாறு காரைதீவில் கோப்பிரஷ்ஸை திறந்துவைத்துரையாற்றிய கிழக்குமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி  தெரிவித்தார்.

காரைதீவு பலநோக்குக்கூட்டுறவுச்சங்கத்தின் புதிய 'கோப் பிரஷ்' கடைத்தொகுதி நேற்றுமுன்தினம்(10)திங்கட்கிழமை சங்கத்தலைவர் வை.கோபிகாந்த் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

பிரதமஅதிதியாகக் கலந்துகொண்ட கிழக்குமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எம்.அஸ்மி ஆதம்லெவ்வை 'கோப் பிரஷ்' கடைத்தொகுதியை நாடாவெட்டி உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

திறப்புவிழாவில் ப.நோ.கூ.சங்கத்தலைவர் வை.கோபிகாந்த் தலைமையுரையாற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா காரைதீவின் கூட்டுறவுத்துறை வரலாறு பற்றி சிறப்புரையாற்றினார்.

கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் காரைதீவு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.முஹம்மட் அன்வர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
கிழக்கு ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க இக்கூட்டுறவுத்துறையை பாரமெடுத்துள்ளேன். ஒருவருடமாகின்ற இவ்வேளையில் கிழக்கிலுள்ள சங்கங்கள் குறைந்தது ஒரு வியாபார நிலையத்தையாவது நடாத்தவேண்டு;ம் என்ற சிந்தனைக்குவெற்றி கிடைத்துள்ளது.
கூட்டுறவுத்துறையை சக்திமிக்கதாக மாற்றவேண்டும் என்பதற்காக இத்தகைய கோப் பிரஷ் பல்பொருள் அங்காடிகளைத்திறந்து மக்களுக்கு சேவையாற்றிவருகின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் 7வதும் கல்முனைப்பிராந்தியத்தில் 2ஆவதுமான கோப்பிரஷ் இன்று காரைதீவில் திறந்துவைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இதற்காக உழைத்த தலைவர் கோபிகாந்த பொதுமுகாமையாளர் ரமேஸ்குமார் உள்ளிட்ட சபையினர் பாராட்டுக்குரியவர்கள்.

இதேபோன்று ஒவ்வொரு சங்கமும் தனியார்கல்வி நிலையங்களை நடாத்த தி;ட்டமிட்டுவருகின்றோம். காரைதீவிலும் அது நடைமுறைப்படுத்தப்படும். அதேபோல் இங்கு ஊர்சார்பாக பேசிய உதவிக்கல்விப்பணிப்பாளர் சகாதேவன் ஜயா இங்கொரு எரிபொருள்நிரப்புநிலையமொன்றின் அவசியம்பற்றி எடுத்துரைத்து வேண்டுகோளொன்றையும் விடுத்தார்.

உண்மையில் இப்படி தீர்க்கதரிசனமாக திட்டத்திற்கு நானும் எனது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவேன். இதுபற்றி கொழும்பில் அமைச்சருடன் கலந்துரையாடுகையில் சங்கங்களுக்கு எரிபொருள்நிரப்புநிலையத்தை நடாத்த அனுமதி வழங்குவதனூடாக மக்களுக்கான சேவையை வழங்குவது மட்டுமல்லாமல் சங்கங்களுக்கு ஒரு நிலையான வருமானத்தை பெற்றுக்கொள்ளக்கூடியதாயிருக்கும் என தெரிவித்துள்ளேன்.

இந்த எரிபொருள் நிலையத்தை தனியாருக்கு கொடுத்தால் அதன் இலாபம் அவரது பக்கட்டுக்கே போய்ச்சேரும். மாறாக கூட்டுறவுச்சங்கங்களுக்கு அனுமதிவழங்கினால் அதன் இலாபம் மீண்டும் மக்களுக்கே போய்ச்சேரும். அவ்வகையில் சங்கங்களும் சக்திபெறும் மக்களும் சேவைபெறுவார்கள்.
கூட்டுறவுத்துறை அபிவிருத்திக்காக சங்கங்களுக்கு  களவிஜயம் மேற்கொண்டேன்.நுகர்ச்சிக்கிளைகளின் பின்னடைந்திருந்தது.
கிழக்கில் 3 கோப்பிரஸ் திறக்க அங்கீகாரம் கிடைந்திருந்தது. ஆனால் எனது முயற்சியின் காரணமாக 16 கோப் பிரஷ் திறக்க வழிகிடைத்தது. இது வெற்றி.அரசு  8மில்லியன் ருபாவினைப்பெற்று அதனை செங்கலடி நிகழ்வில் வழங்கியிருந்தேன்.

கூட்டுறவுத்துறையை வளர்ச்சிடையச்செய்யவேண்டும் எழுச்சியடையச்செய்யவேண்டும் என்று கூறுகின்ற நாங்களே அதனை விமர்சிப்பவராக இருப்பதுதான் கவலைக்குரியவிடயமாகும்.

சங்கங்களின் நட்டத்தை ஈடுசெய்ய 3லட்சருபாவை அரசிடம் பெற்று வழங்கினேன். அனைத்திற்கும் அரசை எதிர்பார்க்கமுடியாது. உள்ளுராட்சிதுறையைப்போல் எமது கூட்டுறவுத்துறையும் சுயாதீனமாக இயங்குபவை.எனவே நாமே வருமானத்தை ஈட்டும் செயற்பாட்டில் ஈடுபடவேண்டும்.
சோர்வு என்ற பதம் கூட்டுறவுத்துறைக்கு மாத்திரம் உரித்தானதாக இருக்கமுடியாது.முயற்சியுடன் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

கிழக்கில் இத்துறையை சக்திமிக்க துறையாக மாற்ற 5வருடங்களாவது என்னை இந்தப்பதவியில் வைக்கவேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டுள்ளேன்.
கிழக்கில் 16சங்கங்கள் மாத்திரமே; உயிர்ப்பாக இயங்கிவந்தது.அதனை மாற்றி அனைத்துசங்கங்களும் எமது சக்த்pமிக்க பயணத்தில் இணையவேண்டும்.
கல்முனைக்கிளையில் நுகர்ச்சிக்கிளைகள் இயங்கிவருது குறைவாகஇருந்தது. அதனை மாற்றுவதற்காக களவிஜயத்தை மேற்கொண்டேன்.

2022ஆம் ஆண்டில் அபிவிருத்தித்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
கோப் பிரஷ் மில்க் சென்ரரை அமைக்க திட்டமிட்டுள்ளேன். காரைதீவு சபைக்கும் அதற்காக 3லட்சருபாவை ஒதுக்கியுள்ளேன். அதனை இந்த கோப் பிரஷ் நிலையத்திற்கு அருகில் அமைக்கவேண்டும்.

மக்களை அண்மித்ததாக எமது சேவைகள் அமையவேண்டும்.
2022இல் கூட்டுறவின் வெற்றி கல்வியை அபிவிருத்தி செய்வதில் தங்கயிருக்கிறது. எனவே  ஒருசில சங்கங்களுக்காக தனியார் பிரத்தியேக கல்விநிலையங்களை அமைக்க முன்மொழிவை முன்வைத்துள்ளேன்.
குறைந்தசெலவில் மாணவர்க்கு கல்வியை வழங்கலாம்.அத்தகைய வ்hய்ப்பு திருக்கோவில் காரைதீவு போன்ற சபைகளுக்கும் கிடைக்கவிருக்கிறது.

புதிய விடயங்களை உட்புகுத்தவேண்டும்.மாற்றங்களை எதிர்கொள்ளவேண்டும். கிண்ணியாவில் ஒசுசலவை அமைத்தோம். கல்முனைப்பிராந்தியத்திலும் அத்தகைய ஒசுசலவை அமைக்க எண்ணியுள்ளோம். எதிர்வரும் காலங்களில் பல பரிமாணமிக்க ஒருதுறையாக கூட்டுறவுத்துறையை  மாற்ற கைகோர்ப்போம். அனைவரும் ஒன்றிணையுங்கள்.வெற்றி நிச்சயம். என்றார்.

கூட்டுறவுத்துறைசேவைக்காக ஆணையாளர் அஸ்மி மற்றும் உதவிஆணையாளர் தங்கவேல் ஆகியோருக்கு நினைவுச்சின்னம் வழங்கிகௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் தலைவர்கள் இயக்குனர்சபை உறுப்பினர்கள் ஊர்ப்பிரமுகர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

காரைதீவு ப.நோ.கூ.சங்க பொதுமுகாமையாளர் எல்.எ.ரமேஸ்குமார் நன்றியுரையாற்றினார்.

 (வி.ரி.சகாதேவராஜா)

Comments