13.04.19- காரைதீவில் புத்தாண்டையொட்டிய பாரிய சிரமதானம்..

posted Apr 12, 2019, 8:27 PM by Habithas Nadaraja   [ updated Apr 12, 2019, 8:41 PM ]
விகாரி வருட சித்திரைப்புத்தாண்டையொட்டி காரைதீவு பிரதேசசபையின் ஏற்பாட்டில் (12.04.2019) காலை காரைதீவுக் கடற்கரைப் பிரதேசத்தில் பாரிய சிரமதானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் போதைப்பொருள் ஒழிப்பு சூழல்சுற்றாடலைச்சுத்தப்படுத்தல் எனும் கருத்திட்டத்தின்  இச் சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறிலின் வழிகாட்டலின் பெயரில் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டும் கரையோரச் சுத்தப்படுத்தல் எண்ணக்கருவின் கீழ் மீனவர்கள் எதிா்நோக்கும் அசௌகரியங்களை தடுக்கவும் டெங்கு அபாயத்திலிருந்து பாதுகாக்கவும் சுற்றுலாப் பயணிகளின் வருகைகளை  ஊக்கு விக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் சிரமதான நிகழ்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

காலை 6மணிமுதல் இடம்பெற்ற இச்சிரமதானத்தில் பிரதேச செயலகம் கடற்படை  இராணுவம்  பொலீஸ் காரைதீவிலுள்ள சமூக அமைப்புக்கள் விளையாட்டு கழகங்கள் சமூர்த்தி அமைப்பு   மாதர் சங்கங்கள் ஆலயங்கள் மீனவர்கள் மீனவசங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பங்கேற்றன.

தவிசாளர் கே.ஜெயசிறில் மற்றும் சபை உறுப்பினர்களும் இச்சிரமதானத்தில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதற்கென கடந்த 10ஆம் திகதி  சபை மண்டபத்தில் தவிசாளர் தலைமையில் இடம் பெற்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இந்த சிரமதான நிகழ்வில் குழுக்களாக பிாித்து மாபெரும் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

காரைதீவு நிருபர் 
Comments