12.05.19- பாடசாலைக்கருகில் சந்தேகத்திற்கிடமான லொறிகளிடையே பண்டமாற்றமா..

posted May 11, 2019, 7:23 PM by Habithas Nadaraja
பாடசாலைக்கருகில் சந்தேகத்திற்கிடமானலொறிகளிடையே பண்டமாற்றமா?
தவிசாளரின் அதிரடி நடவடிக்கையால் மாணவரின் பாதுகாப்பு உறுதி..


பாடசாலையருகே சந்தேகத்திற்கிடமான இரு லொறிகளிடையே பண்டங்கள் மாற்றப்படடுக்கொண்டிருந்ததைக் கேள்வியுற்ற தவிசாளர் போக்குவரத்துப்பொலிசாரை அழைத்து அவற்றை அகற்றி மாணவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்.

இச்சம்பவம் காரைதீவில்  நடைபெற்றது.

வெளிப்பிரதேசத்தைச் சேர்ந்த இரு பாரிய லொறிகள் காரைதீவின் மத்தியிலுள்ள இ.கி.மி.பெண்கள் பாடசாலைக்கருகில் நிறுத்திவைக்கப்பட்டு பண்டமாற்றம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன.

இந்த லொறிகளோ அந்தப்பண்டங்களோ எவ்விதத்திலும் காரைதீவுக்குரியதல்ல என்பதை அறிந்துகொண்ட காரைதீவுப்பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் உடனடியாக போக்குவரத்துப்பொலிசாருக்குத் தகவலை வழங்கித் தானும் ஸ்தலத்திற்குவிரைந்தார்.
போக்குவரத்துப்பொலிசாரும் வந்து விசாரித்தபோது காரைதீவு ஊருக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத லொறிகள் எதற்காக பாடசாலையருகே நிறுத்தப்பட்டன என்பது தொடர்பில் விசாரணைசெய்தனர்.

உடனடியாக இரு லொறிகளையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். அவர்களை பொலிசார் விசாரணைக்குட்படுத்தினர்.
இதனால் சிலமணிநேரம் அப்பிரதேசம் பதட்டநிலை நிலவியிருந்தது.எதுஎப்படியிருப்பினும் பாடசாலை மாணவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டமை பெற்றொர் தவிசாளருக்கு நன்றிகூறினர்.

(காரைதீவு நிருபர்)
Comments