12.05.19- தேசியமட்ட போட்டிக்கு எட்டாவது முறையாக தகுதி பெற்ற காரைதீவு பிரதேச செயலக அணி..

posted May 11, 2019, 7:28 PM by Habithas Nadaraja

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பிரதேசசெயலகங்களுக்கிடையில் நடாத்திய அம்பாறை மாவட்டமட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் காரைதீவு பிரதேசசெயலக அணி முதலிடத்தைப்பெற்று சாம்பியனானது.

காரைதீவு விபுலாநந்த மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் காரைதீவு பிரதேச செயலக அணியும் சம்மாந்துறை பிரதேசசெயலக அணியும் மோதிக்கொண்டன. இறுதியில் காரைதீவு அணி  85-25 என்ற புள்ளிகள் அடிப்படையில் சம்மாந்துறை பிரதேச செயலக அணியை வெற்றி கொண்டது.

இந்த வெற்றியின்மூலம் காரைதீவு அணி தொடர்ச்சியாக எட்டாவது முறையாகவும் தேசியமட்டப்போட்டிக்குத் தெரிவானது என்ற சாதனையையும் நிலைநாட்டியுள்ளது.இறுதிப்போட்டிக்கு தேசிய இளைஞர்சேவை மன்றத்தின் அம்பாறை மாவட்ட இளைஞர்சேவை அதிகாரி எம்.முபாறக் உதவிப்பணிப்பாளர் உள்ளிட்டேர்ரம் கலந்துசிறப்பித்தனர்.விளையாட்டு உத்தியோகத்தர் பி.வசந்த் நடுவராகக்கடமையாற்றினார்.

காரைதீவு  நிருபர்
Comments