13.01.22- தைப்பொங்கலுக்கான புத்தரிசி ,பானை முதலான பொருட்கள் இலவசமாக வழங்கி வைப்பு..

posted Jan 12, 2022, 5:11 PM by Habithas Nadaraja
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்த ஒரு தொகுதி மக்களுக்கு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி தொடக்கம் சட்டி பானை வரை இலவசமாக வழங்கப்பட்டது.


தைத்திருநாளுக்கான தமிழர்களுடைய கலை கலாச்சாரம் பாரம்பரியங்களை மெருகூட்டும் வகையில் இந்த உதவி வழங்கப்பட்டது.
கனடாவைச் சேர்ந்த கிருஷேந்திரா பேரின்பமூர்த்தி அவர்களுடைய 13 ம் ஆண்டு நினைவை முன்னிட்டு தமிழுக்கும் சைவத்திற்கும் தமது குடும்பத்தினால் இந்த உதவி வழங்கப்படுகின்றது. 

இதனை காரைதீவு பிரதேச சபைத் தவிசாளரும் ,சமூக சேவையாளருமான கிருஷ்ண பிள்ளை ஜெயசிறில் வழங்கி வருகிறார்.

 அம்பாறை மாவட்டத்தில் மிகவும் வறுமையில் இருக்கக்கூடிய குடும்பங்களுக்கு தங்களுடைய குடும்ப நினைவு தினத்தையும் பொங்கலையும் சிறப்பிக்கும் முகமாகவும் 100 குடும்பங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் பரவலாக இந்த அரிசி பானை பொங்கலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவர்களுடைய குடும்பம் சார் உறவுகள் வழங்கி இருக்கின்றார்கள்.

 அம்பாறை மாவட்ட மக்கள் சார்பாக அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதோடு
இந்த வழங்கல் என்பது திருக்கோவில் பிரதேசத்திற்கு உட்பட்ட கஞ்சிகுடியாறு , தம்பிலுவில் , விநாயக புரம் , தம்பட்டை பரவலாக வழங்கப்பட்டது குறிப்பிட தக்கது.


( காரைதீவு குறூப் நிருபர் சகா)


Comments