13.03.19- கிழக்கு கரையோரச்சமரில் விபுலாநந்தா மகத்தான வெற்றி..

posted Mar 13, 2019, 10:04 AM by Habithas Nadaraja   [ updated Mar 13, 2019, 10:07 AM ]
வரலாற்றில் முதற்றடவையாக   ஸ்ரீலங்கா  டெலிகொம் நிறுவன அனுசரணையுடன் கிரிக்கட் பெருஞ்சமர் (BIG MATCH)  காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரிக்கும் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலைக்கும் நேற்று (12.036.2019)   காரைதீவு  கனகரெத்தினம்  மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற 'கிழக்குகரையோரச்சமரில்' 46ஓட்டங்களால் காரைதீவு விபுலாநந்தா அணி வெற்றி வாகைசூடியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய விபுலாநந்தா அணி 28.4ஓவரில் 137ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சோபிதாஸ் 10பவுண்டரிகள் அடங்கலாக 49ஓட்டங்களைப்பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை உவெஸ்லி அணியினர் 24ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 89ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

சிறந்த பந்துவீச்சாளராக விபுலாநந்தா அணியின் விதுசன் தெரிவானார். அவருக்கான வெற்றிக்கிண்ணாத்தை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா வழங்கிவைத்தார்.

சிறந்த துடுப்பாட்டவீரராக விபுலாநந்தா அணியின்  சோபிதாஸ் தெரிவானார்.அவருக்கான வெற்றிக்கிண்ணத்தை டெலிகொம் நிறுவனத்தின் கல்முனைப்பிராந்திய முகாமையாளர் பிரான்சிஸ் நியுட்டன் நிசாந்த் வழங்கிவைத்தார். போட்டியின் சிறந்த வீரராக விபுலாநந்தா அணியின் சிறிஸ் தெரிவானார்.அவருக்கான வெற்றிக்கிண்ணத்தை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் வழங்கிவைத்தார்.

இறுதியில் முதலாவது சமரில் முதல்வெற்றியைப்பெற்ற காரைதீவு விபுலாநந்தா அணி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

ரெலிகொம் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதிப்பொதுமுகாமையாளர் பொறியியலாளர் வை.கோபிநாத் சந்தைப்படுத்தல் பிரதிப்பொது முகாமையாளர் பொறியியலாளர் அனுருத்தசூரியாராய்ச்சி பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் நியுட்டன் நிசாந்த் சந்தைப்படுத்தல் பொறியிலாளர் டி.எஸ்.பி.மாபா  காரைதீவு பிரதேசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா பழையமாணவர்சங்கத்தலைவர் வி.விஜயசாந்தன் உள்ளிட்டோர் வெற்றிக்கிண்ணத்தை வழங்கிவைத்தனர்.

காரைதீவு சகா\


Comments