13.08.19- காரைதீவின் உள்ளகவீதிகள் வடிகான்கள் பற்றியமதிப்பீடு..

posted Aug 12, 2019, 6:55 PM by Habithas Nadaraja
காரைதீவின் உள்ளகவீதிகள் வடிகான்கள் பற்றியமதிப்பீடு
காரைதீவு பிரதேசசெயலாளர் தவிசாளர் கூட்டாக களப்பயணம்..


காரைதீவின் உள்ளகவீதிகள் மற்றும் வடிகான்கள் தொடர்பான மதிப்பீடு மற்றும் எதிர்கால நடவடிக்கைகளுக்காக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் மற்றும் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோர் களப்பயணமொன்றை மேற்கொண்டு பார்வையிட்டனர்.

திருத்தவேலைகள் உடனடியாக தேவைப்படும் வீதிகள் வடிகான்கள் சுத்தம் பராமரிப்பு தேவைப்பாடு தொடர்பாக அவ்வீதியிலுள்ள குடியிருப்பாளர்களின் கருத்துக்களை இதன்போது கேட்டறிந்தனர்.

புனர்வாழ்வு அமைச்சினால் தவிசாளர் ஜெயசிறிலின் வேண்டுகோளுக்கமைவாக கிடைக்கப்பெற்ற வீதித்திருத்தநிதி ஒதுக்கீட்டில் திருத்தப்படவேண்டிய வீதிகளையும் குழுவினர் பார்வையிட்டனர்.

இக்களப்பயணத்தில் தொழினுட்ப உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி அலுவலர்கள் ஆகியோரும் பிரசன்னமாயிருந்தனர்.இதுவரை புனரமைக்கப்படாது மோசமாகவுள்ள வீதிகளின் விபரங்களையும் குழுவினர் நேரடியாகப்பாhத்துப் பெற்றுக்கொண்டனர்.
Comments