14.04.19- இலங்கையில் இரு இனங்களும் இணையும் இனியவிழா..

posted Apr 13, 2019, 6:50 PM by Habithas Nadaraja
இலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் இருபெரும் இனங்களான தமிழர்களும் சிங்களவரும் ஒருமித்துக் கொண்டாடும் விழாக்களில் சித்திரைப்புத்தாண்டு மிகவும்முக்கியமானதாகும். இவ்விருஇனங்களின் கலாசார மரபுரீதியான பாரம்பரிய சம்பிரதாய நிகழ்ச்சிகள் சடங்குகள் இப்புத்தாண்டில் பிரதிபலிக்கின்றன.

எமது பிரபவ முதல் அட்சய வரையிலான தமிழ்வருடங்கள் அறுபதுக்குள் 33வது வருடமான விகாரி வருடம் இன்றுபிறக்கிறது. பிரம்மா உலகைப்படைப்பு ஆரம்பித்தநாள் என்று இந்தவருடப்பிறப்பைக்கூறுவர்.

வருடப்பிறப்பு:
தமிழர்களின் 60வருச சுற்றுவட்டத்தின் 33வது வருடமாகிய புதிய விகாரி தமிழ்வருடப்பிறப்பு வாக்கியப்பஞ்சாங்கப்படி ஏப்றல் 14ஆம் திகதி (சித்திரை -01) பிப 1.12மணிக்கு உதயமாகிறது.

ஞாயிறு மு.ப.9.12மணிமுதல் பிப 5.12மணிவரை விஷூ புண்ணியகாலமாகும். இக்காலப்பகுதியில் சிரசில் ஆலிலையும் காலில் இலவமிலையும் வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்ஞானம்செய்து வழிபாடியற்றவேண்டும்.

வெள்ளைநிறப்பட்டாடை அல்லது வெள்ளை சிவப்புக்கரை அமைந்த பட்டாடை இவ்வருடத்துக்கான ஆடையாகும்.
திருக்கணிதபஞ்சாங்கத்தின்படி புதுவருடம் 14ஆம் திகதி பிப 2.09மணிக்குப்பிறக்கிறது.  மு.ப.10.09மணிமுதல் பிப 06.09மணிவரை விஷூ புண்ணியகாலமாகும். இக்காலப்பகுதியில் சிரசில் இலவமிலையும்  காலில் விளாஇலையும் வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்ஞானம்செய்து வழிபாடியற்றவேண்டும். வெள்ளை சிவப்புக்கரை அமைந்த பட்டாடை இவ்வருடத்துக்கான ஆடையாகும்.

 கைவிசேசம் விஷூபுண்ணிய காலத்திலும் செய்யலாம். ஞாயிறு இரவு 10.31முதல் 11.15வரையுமான காலப்பகுதியிலும் செய்யலாம். அல்லது 17ஆம்திகதி புதன் பகல் 10.16முதல் 11.51வரையும் 18ஆம் திகதி பகல் 9.47முதல் 11.46வரையான் காலப்பகுதியிலும் செய்யலாம்.
மிதுனம்கன்னி மகரம்கும்பம் ராசிக்காரர்களுக்கு லாபமான வருடம். மேடம் விருச்சிகம் இடபம் துலாம் கர்க்கடகம் ராசிக்கரர்களுக்கு சமசுகமும் சிம்மம் தனுமீனம் ராசிக்காரர்களுக்கு நஸ்ட்டமும் ஏற்படும்வருடம்.

புதுவருசபலனாக நற்பலன்கள் நான்கும் தீயபலன்கள் மூன்றும் காட்டப்டுகின்றது.

சித்திரைமாதம் முதலாம்திகதி(14.04.2019) அதாவது சூரியபகவான்  மீனராசியிலிருந்து மேடராசிக்குள் பிரவேசிக்கும் காலமாகும்.சூரியன் மேடராசியில் பிரவேசித்து வடக்கேசெல்லும் காலம் உத்தராயணகாலம் ஆகும். இதனை வசந்தகாலமென அழைப்பர்.இலங்கையில் வசந்தகாலம் இந்தசித்திரைமாதம் .நுவரேலியாவில் வசந்தகாலம் இந்தசித்திரைமாதத்திலேயே இடம்பெறுவது தெரிந்தவிடயமே.
இயற்கை அதற்கான ஆயத்தங்களை செய்கின்ற அதேவேளை மனிதர்களும் உயிரினங்களும் கூடவே புதுவருடத்திற்கான ஆயத்தங்களைச்செய்துவருவதை அற்புதமாகப்பார்க்கலாம்.

இயற்கை இயற்கையாகவே வசந்தகாலத்தை தோற்றுவித்ததும் குயில்கூவ ஆரம்பிக்கிறது. மரம்செடிகொடிகள் புத்துணர்ச்சிபெறுகின்றன. புள்ளினங்கள் ஒழுங்கிலே பறப்பதும் கீச்சிடுவதும் ஒன்றும் புதிதல்ல.

தமிழரின் ஆண்டு பிறப்பு சித்திரை 14 அல்லது 15ல் தொடங்குகிறது. அதற்கமைவாகவே மகாவசம் நூலின் குறிக்கப்பட்டிருக்கும் ஆண்டு தொடக்கமும் அதே நாளை குறிக்கிறது. இங்கே சித்திரை 14 அல்லது 15ம் திகதியில் ஆண்டு தொடக்கமாகக் கொள்ளும் முறை தமிழர்களுடையது என்பதை தெளிவாக்கிக்கொள்ளலாம். 

அதற்கமைவாக தமிழ் ஆண்டு தொடக்கம் சித்திரை முதலாம் திகதி (ஏப்ரல் 14 அல்லது 15) புத்தாண்டு கொண்டாடப் படுகின்றது. தமிழ் காலக்கணிப்பீட்டு முறையை ஆரம்பம் முதலே சிங்களவர்கள் பயன்படுத்தி வந்த வழக்கின் காரணமாகவே இன்றும் இலங்கை சிங்களவர்கள்இ தமிழ் புத்தாண்டைஇ தமிழ் சிங்களப் புத்தாண்டு எனக் கொண்டாடுகின்றனர்.
இப்புத்தாண்டுக்கு சிங்களவர் கொடுக்கும் விளக்கம் 'சூரியன் மேச இராசியில் பயணத்தை தொடரும் நாள்' என்பதாகும். சிலர் இந்தியப் பண்பாட்டுத் தாக்கத்தால் உருவானதாகக் கூறுவோரும் உளர். இதைத் தவிர வேறு விளக்கங்களோஇ காரணங்களோ இலங்கை சிங்களவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
இலங்கையில் புத்த மதம் அறிமுகமான காலப் பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த அரசர்களின் பெயர்களைப் பார்த்தால்:
 

Bak, Vesak, Poson, Æsala, Nikini, Binara, Wap, Il, Undhuvap, Dhuruthu, Navam, Mædhin.

இதன் அடிப்படையில் தமிழரின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான; 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் கணக்கிடப்படும் (பிரபவ – அட்சய) காலக் கணிப்பீட்டு முறை இலங்கையில் இருந்துள்ளதை அறியலாம்.
இதைத் தவிர பழந்தமிழர்களிடம் பிரமிக்க வைக்கும் கணக்கியல்இ கூட்டல் எண்கள்இ அளவைகள் போன்றவைகளும் இருந்துள்ளதை அறிய முடிகின்றது.

எனவே இதனடிப்படையில் பழந்தமிழர் பயன்படுத்திய காலக் கணிப்பீட்டு முறையே இலங்கையில் இருந்தாகக் கொள்ளலாம். இதனை சான்றுகளுடன் நிரூபிக்க கூடிய தடயங்கள் எதுவும் இல்லை என்றாலும்இ யாரும் மறைக்க முடியாத சான்றாகவே இன்றும் இலங்கை சிங்களவர்களிடம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்வதை உணரக்கூடியதாக உள்ளது.

தமிழர் காலக்கணிப்பீட்டு முறைகள் இன்று பல தமிழ் இணையத்தளங்கள்இ செய்தித் தாள்கள்இ திருமண அழைப்பிதல்கள்இ கோயில் உட்சவங்கள்இ பஞ்சாங்கம் பார்த்தல்இ நேரம் குறித்தல் போன்றவற்றில் பயன்படுவதைக் காணலாம். சில கிராமங்களில் தமிழ் மாதப்பெயரிகளிலே தைஇ மாசிஇ பங்குனி என காலங்களை குறித்துப் பேசுவோரும் உளர்.

இலங்கை சிங்கள பௌத்தப் பிக்குகள் நேரம் குறித்தல்இ பஞ்சாங்கம் கணித்தல் போன்றவற்றில் நமது தமிழ் காலக்கணிப்பீட்டு முறையை பயன்படுத்துவதை சிற்சில இடங்களில் காணலாம். ஆனால் சிங்களவரது பயன்பாட்டில் இல்லை. இவை முற்றிலுமாக மறைந்து விட்டன. அல்லது மறைக்கப்பட்டுவிட்டன.

ஆனால் காலத்தால் மறைக்க முற்பட்டாலும்இ மறைக்க முடியாத சான்றாகவே காலம் காலமாக பழங்காலம் தொட்டு கொண்டாடிவரும் தமிழர் புத்தாண்டு இன்றும் இவர்களின் கொண்டாட்டமாக இருக்கின்றது. இன்றும் இத் தமிழ் ஆண்டுப் பிறப்பைஇ சிங்களவர்கள் தமிழ் சிங்களப் புத்தாண்டுஎன கொண்டாடி வருகின்றனர்.

சிங்களப் புத்தாண்டு என்பது இலங்கை சிங்களவர்களால் பழங்காலம் தொட்டே கொண்டாடி வரும் புத்தாண்டு கொண்டாட்ட முறையாகும். இந்த புத்தாண்டு கொண்டாட்ட முறை இலங்கையின் பழங்காலத் தமிழர்களின் வழியாக இலங்கையில் தோற்றம் பெற்ற தமிழர் புத்தாண்டு முறையே ஆகும். அதனாலேயே இலங்கையில் தமிழ் சிங்களப் புத்தாண்டு என அழைக்கின்றனர். தமிழர் காலக்கணிப்பீட்டு முறைக்கு அமைய 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் (பிரபவ – அட்சய) கணக்கிடப்படும். சித்திரை முதலாம் திகதி (ஏப்ரல் 14 அல்லது ஏப்ரல் 15) ஆண்டு தொடக்கம் நிகழும். 

அதுவே தமிழரின் புத்தாண்டாகும். அதனையே சிங்களவரும் புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர். சிங்கள மொழியில் (அழுத் ஸ்ரீ புதிய அவுருது ஸ்ரீ ஆண்டு) அழுத் அவுருதுஎன்றழைக்கப்படுகின்றது.

இப்புத்தாண்டு ஆரம்பிக்கும் முதல் நாள் தொடக்கம் ஒவ்வொரு நிகழ்வுகளும் பஞ்சாங்கத்தின் குறிக்கப்படும் நேரங்களின் அடிப்படையிலேயே தொடங்கப்படும். எனவே இப் பஞ்சாங்க நேரம் குறித்தலின் படி புத்தாண்டு நாளில் இருந்து (ஏப்ரல் 14) சில நாட்களுக்கு பின்பே வேலை மற்றும் பணி நிமித்தம் வெளிக்கிளம்பும் நாள் குறிக்கப்பட்டிருக்கும். அந்நாளிலேயே அதிகமானோர் தத்தமது பணிக்கு மீள்வர்.

ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இறந்திருந்தால்இ அவ்வீட்டார் புத்தாண்டு கொண்டாடுவதில்லை. அவ்வீட்டாரை 'தீட்டு வீடு' என்பதுப் போல்இ சிங்களவர்கள் 'கிலி கே' (கிலி - தீட்டு,கே - வீடு) என்கின்றனர். 

அப்பொழுது அயலவர்களும் உறவினர்களும் இவ்வீட்டாருக்கு உணவு மற்றும் தின்பண்டங்கள் வழங்கும் பழக்கமும் சிங்களவர்களிடம் உள்ளது. இதுவும் தமிழர்களிடம் காணப்படும் பழக்கவழக்கங்களில் ஒன்றாகும்.

சிங்களவரின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தமிழரின் பண்பாட்டில் இருந்தே தோன்றியது என்றாலும் சிற்சில வேறுபாடுகளும் உண்டு; 

1. புத்தாண்டு பிறக்கப் போகிறது என்றால் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்தல் தமிழர்களின் பழக்கங்களில் ஒன்றாகும். சிங்களவர்களும் அப்படியே. தற்காலத்தில் சுண்ணாம்பு அடித்தல்இ வெள்ளைப் பூசுதல்இ வர்ணம் பூசுதல் என மாற்றம் பெற்றுள்ளது.

2. புத்தாண்டுக்கு முதல் நாட்களில் வீட்டை சுத்தம் செய்தல்இ (வீட்டின் மண் தரை) சாணம் இட்டு மெழுகுதல்இ (வீட்டின் சிமெந்து தரை) கழுவுதல் போன்றவைகளும் தமிழர் போன்றே சிங்களவர்களும் செய்கின்றனர். (சாணம் இட்டு வீடுகளை மெழுகும் வழக்கம் திராவிடரின் பழக்கவழக்கங்களில் ஒன்றாகும்.)

3. புத்தாண்டு பிறப்பிற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே புத்தாண்டு நிகழ்வுகளை பஞ்சாங்க நேரக் கணிப்பீட்டின் படியே தமிழர்கள் செய்வது வழக்கம். சிங்களவர்களும் அப்படியே செய்கின்றார்கள். பஞ்சாங்கம் எனும் சொல் சிங்களவர்களால் 'பஞ்சாங்க' என்று 'ம்' எழுத்தின் ஒலிப்பின்றி பயன்படுத்துகின்றனர். இச்சொல் தமிழரின் வழக்கில் இருந்து சிங்களத்திற்குச் சென்றதாகக் கொள்ளலாம். (பஞ்சாங்கம் என்பது தமிழில் வழங்கும் வடமொழிச்சொல்) அதேவேளை பஞ்சாங்கம் எனும் சொல்லுக்கு 'லித்த' எனும் வேறு ஒரு சொல்லும் சிங்களவர்களின் புழக்கத்தில் உள்ளது.

•4. தமிழர்களின் புத்தாண்டில் முதன்மையானவற்றுள் ஒன்றாக இருப்பதுஇ பணியாரமும் வாழைப்பழமும் ஆகும். சிங்களவர்களிடமும் அவைகளே முக்கிய அங்கம் வகிக்கின்றது. புத்தாண்டிற்கு சில நாட்களுக்கு முன்பே வாழைக் குழைகள் பழுக்க வைக்கப்பதும் அப்படியே.

•5. புத்தாண்டிற்கு சில நாட்களுக்கு முன்பே பணியாரம் மற்றும் தின்பண்டங்கள் செய்து புத்தாண்டு நாள் பாவனைக்காக மண் முட்டிகளில் பத்திரப்படுத்தும் வழக்கம் பழந்தமிழர் தொட்டு இருக்கின்றது. இதுவும் சிங்களவர்களிடம் உண்டு.

•6. இந்த புத்தாண்டிற்கான பணியாரம் மற்றும் தின்பண்டங்கள் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்ட நேரத்திலேயே தயாரிக்க தொடங்கவேண்டும் எனும் ஒரு வழக்கு சிங்களவரிடையே உள்ளது. அதற்கு 'எண்ணைப் பாத்திரம் அடுப்பில் வைக்கும் நேரம்' (Thel Valan Lipa Thebeema Nekatha) எனக் கூறப்படுகின்றது. அந்நேரத்திலேயே புத்தாண்டிற்கான தின்பண்டங்கள் தயாரிப்பதற்கு தீ மூட்டி எண்ணைப் பாத்திரங்கள் அடுப்பில் வைக்கப்படுகின்றது.

புத்தாண்டுத்  தின்பண்டங்கள்

பணியாரம் – கெவுங் 
கொண்டை பணியாரம் - கொண்டே கெவுங்
பாசிப்பயறு பணியாரம் - முங் கெவுங்
கொக்கிசு - கொக்கிஸ்
அலுவா - அலுவா
வெளித்தலப்பா - வெளித்தலப்பா
பானிவலயல் - பெனிவலலு

தமிழர்களின் புத்தாண்டில் முக்கியமாக பணியாரம் மற்றும் பாசிப்பயறு பணியாரம் இருக்கும். சிங்களவர்களிடமும் அப்படியே. சிங்களவர்கள் தயாரிக்கும் கொண்டைப் பணியாரம் தமிழரின் பழக்கத்தில் இல்லாத ஒன்று. ஆனால் கொண்டைப் பணியாரம் என்பது தமிழர்கள் தயாரிக்கும் சாதாரணப் பணியாரம் போன்றே சுவை ஒன்று தான். வேறுப்பாடு அதன் வடிவமைப்பில் தான். பெண்களின் கொண்டைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். (இங்கே 'கொண்டை' எனும் தமிழ் சொல்லே 'கொண்டே' எனப்படுவதையும் அவதானிக்கலாம்.)

தமிழர்களிடம்இகுறிப்பாக ஈழத்தமிழர்கள் தயாரிக்கும்பனங்காய் பணியாரம் இவர்கள் தயாரிப்பதில்லை.பாசிப்பயறு பணியாரம் தமிழர்களது போன்றே சிங்களவர்களும் தயாரிக்கின்றனர். இதன் சுவையிலோ தோற்றத்திலோ வேறுப்பாடுகள் இல்லை.இதைத் தவிர கொக்கிஸ் அலுவா வெளித்தலப்பாபானிவலயல் போன்றத் தின்பண்டங்களும் சிங்களவர்களின் புத்தாண்டில் காணப்படுகின்றது.


புத்தாண்டு கலாச்சார விளையாட்டுக்கள்

புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளயாட்டுக்கள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை. சில இடங்களில் புத்தாண்டு அன்றே நடைபெறும். அநேக இடங்களில் தத்தமது வசதிக்கேற்ற நாட்களில் வைத்துக்கொள்வர். இது ஒருமாதகாலத்திற்கு நீடிக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.

புத்தாண்டையொட்டி மரதன் ஓட்டடம் சைக்கிள்ஓட்டம் என்பன வருடப்பிறப்பிற்கு முன்னரே நடைபெறத்தொடங்கும். நாடுபுராக இனமதபேதமின்றி இப்போட்டிகளில் சகலரும் பங்கேற்பார்கள்.

விளையாட்டுநிகழ்ச்சிகள் ஒருபுறம் இசைநிகழ்ச்சிகள் பரவலாக விடிய விடிய இடம்பெறும். இக்காலபப்கதியில் மக்கள் ஒரேகுதூகலத்தில் திளைப்பார்கள்.

இப்புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளையாட்டுக்களில் சில:
வழுக்கு மரம் ஏறுதல்
தலையணைச் சமர் 
கண்கட்டி முட்டி உடைத்தல்
கயிறு இழுத்தல்.
கிடுகிழைத்தல்
தேங்காய்திருவுதல்
சூப்பியில் கோக் குடித்தல்
வயோதிபர்கள் சுருட்டு மூட்டுதல்
சங்கீதக்கதிரை 
யானைக்கு கண் வைத்தல்
பப்பாசிப்பழத்தினுள் இருக்கும் கொட்டைகளை எண்ணுதல்!
ஊர் சுற்றி ஓட்டப் பந்தயம்
மறைந்திருக்கும் நபர் தேடுதல்
மிதி வண்டி ஓட்டப்போட்டி
ரபான் அடித்தல் போட்டி
அழகுராணி தேர்வு (சிங்கள கலாச்சார உடையில்)
பெண் குழந்தைகளின் அழகுராணிப் போட்டி

இவ்வாறு சிங்களப் புத்தாண்டு தமிழரின் கொண்டாட்டங்களில் இருந்து சில வேறுப்பாடுகளைக் கொண்டிருந்தாலும்இ இவை தமிழரின் பண்பாட்டு பழக்கவழக்கங்களில் இருந்தே தோன்றியவை என்பதை எவரும் மறுக்க முடியாது. அதாவது பாட்டன் பூட்டன் முப்பாட்டன் காலமாக தமிழ் புத்தாண்டையே சிங்களவர்களும் கொண்டாடி வந்த வழக்கின் காரணமாகவே இன்றும் அவர்கள் தமிழ் புத்தாண்டை 'தமிழ் சிங்களப் புத்தாண்டு' என கொண்டாடி வருகின்றனர். இது வரலாற்று ரீதியாக தமிழரின் பண்பாடும் பழக்கவழக்கங்களும் இலங்கை தீவெங்கும் வியாபித்து இருந்ததற்கான ஒரு சான்றாகும்.

விகாரி புதுவருசபலனாக நற்பலன்கள் நான்கும் தீயபலன்கள் மூன்றும் காட்டப்படுகின்றது.
இவ்வருட பலாபலனின்படி அற்பமழை பயிரழிவு பஞ்சம் நோய் உண்டாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு கட்டியம் கூறுமாப்போல் தற்போதைய தகிக்கின்ற வெப்பம் அதனாலுண்டாகும் நோய்கள் என்பனவற்றைச்சொல்லாமல் சொல்லலாம்.

தமிழர்கள் என்றோ கணித்த கிரகணங்களின் தோற்றம் இன்றும் நிஜமாகவே நீடிக்கிறது. பஞ்சாங்கத்தில் ஒருவருடத்தின்முன்னே கணித்துக் குறித்த தினத்தில் குறித்த கிரகணம் இடம்பெறுவது எத்துணை ஆச்சரியம்.! இம்முறை 02.07.2019இல் பூரணசூரிய கிரகணம் இடம்பெறும். ஆனால் இது இலங்கையில் தோற்றாது என்று தமிழ்வானியல்நிபுணர்கள் இன்றே சொல்லிவிட்டார்கள் என்றால் அதன்கணிப்பு எத்தகையது என்பது மெச்சத்தக்கது.

16.07.2019இல் சந்திரகிரகணமும்  26.12.2019இல் கங்கணசூரியகிரகணமும் இலங்கையில் தோன்றும் என்று துல்லியமாக தமிழர்கள் கூறிவிட்டார்கள். இதைவிடக்கணிப்புத்தேவையா?

இவ்வாறு புத்தாண்டின் சிறப்புகள் மகத்துவம்  மிக்கது. அவற்றை ஆழமாக அறிந்து கடைப்பிடிக்கின்றபோது நாம்புத்துணர்ச்சி பெறுவது மட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கையாக வாழ்க்கையை வளம்படுத்திக்கொள்ளலாம்.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா


Comments