15.05.20- கொரோனா இல்லையென்ற தவறான மனநிலையில் மக்கள்..

posted May 14, 2020, 6:23 PM by Habithas Nadaraja
இன்று கொரோனா இல்லையென்ற தவறான மனநிலையில் மக்கள்
இந்நிலைஆபத்துஎன்கிறார் அம்பாறை மேலதிக அரசஅதிபர் ஜெகதீசன்..


நாடு திறந்துவிடப்பட்டதும் இன்று கொரோனா இல்லை என்பது போன்ற மனநிலையில் மக்கள் பழையவாழ்க்கையை வாழத்தலைப்பட்டுள்ளனர். இது ஆபத்தான நிலை. மக்கள் தமது வாழ்க்கைக்கோலத்தை மாற்றியே ஆகவேண்டும். தவறினால் தவிக்கநேரிடும்.

இவ்வாறு புலம்பெயர் தொழிலாளர்களின் உறவுகளுக்கு நிவாரணம் வழங்கிவைத்துரையாற்றிய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் விசேட செயலணியின்கீழ் உருவாக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் நலனோம்புகைத்திட்டத்தின்கீழ் அம்பாறை மாவட்டத்தில் 288உறுப்பினர்களுக்கு 2000ருபா பெறுமதியான 288உலருணவுப்பொதிகள் பிரதேசம்தோறும் 'சுவாட்' அமைப்பினால் வழங்கப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் காரைதீவு பிரதேசத்திற்கான புலம்பெயர்தொழிலாளர்களின் உறவினர்களுக்கு உலருணவுநிவாரணப்பொதி வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேசசெயலகத்தில் |சுவாட்' அமைப்பின் தலைவர் எஸ்..பரமசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

பிரதானிகளாக மேலதிக அரசஅதிபர் வே.ஜெகதீசன் காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன்  ஆகியோர் சமுகமளித்திருக்க நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் கே.பிரேமலதன் நிகழ்வை நெறிப்படுத்தினார்.

அங்கு ஜெகதீசன் மேலும் உரையாற்றுகையில்:

நாட்டில் ஜனாதிபதியின் தீர்க்கதரிசனமான செயற்பாடுகளினால் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் மிகவும் அவதானமாக சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து ஒத்துழைக்கவேண்டும்.ஒருவர் தவறினாலும் இதுவரை கட்டிக்காத்துவந்த கட்டுப்பாடுகள் தியாகம் அர்த்தமற்றதாகிவிடும். 'சுவாட்' அமைப்பின் இத்தகைய மனிதாபிமான காலத்திற்கேற்ற செயற்பாடுகள் மிகவும் ஈண்டு பாராட்டத்தக்கது. என்றார்.

சுவாட் அமைப்பின் தலைவர் பி.பரமசிங்கம் பேசுகையில்:

நாட்டுக்கு வருவாயை ஈட்டித்தந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் இன்று நிர்க்கதியிலுள்ளளனர். அவர்களது வருவாய் இழக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களது வீடும் நாடும் முடக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 4ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதி ஏற்பாட்டில் வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகத்தில் பிரதான சந்திப்பு இடம்பெற்றது. அதற்கிணங்க 25மாவட்டம்தோறும் இத்தகையோரின் குடும்பங்களுக்கு உதவவேண்டும் என்ற திட்டத்தின்கீழ் அம்பாறை மாவட்டத்தில் 288குடும்பங்களுக்கு எமது 'சுவாட் ' அமைப்பு உதவிவருகிறது.

25வருடகாலம் திரு.எஸ்.செந்துராஜாவின் வழிகாட்டலில் சீராக மக்களுடன் இணைந்து இயங்கிவரும் 'சுவாட'  கொரோன தடுப்பு நிவாரணச் செயற்றிட்டத்திலும் பங்கேற்றுவருவதில் மகிழ்ச்சி என்றார்.

காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன்உரையாற்றுகையில்:

புலம்பெயர் தொழிலாளிகள் காரைதீவில் 120பேரளவில் உள்ளது. அவர்களது குடும்பங்கள் கஸ்ட்டப்படுகின்ற இவ்வேளையில் 'சுவாட'; அமைப்பு உதவிவருவது பாராட்டுக்குரியது என்றார்.நிகழ்வில் அதிதிகளுடன் மூத்தஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜாவும் இணைந்து பொதிகளை மக்களுக்கு வழங்கிவைத்தார்.

(காரைதீவு  நிருபர்)
Comments