15.10.19- இன்று காரைதீவில சர்வதேச வெள்ளைப்பிரம்புதின நிகழ்வு..

posted Oct 14, 2019, 6:24 PM by Habithas Nadaraja
சர்வதேச வெள்ளைப்பிரம்புதினத்தையொட்டி காரைதீவு பிரதேச சபை இன்று (15.10.2019)  காலை சர்வதேசவெள்ளைப்பிரம்புதின நிகழ்வை காரைதீவில் நடாத்தவுள்ளது.

முன்னதாக பிரதேசசபை முன்றலிலிருந்து விழிப்புணர்வு ஊர்வலம் பிரதானவீதி  மற்றும் திருமால்முகவீதியூடாக விபுலாநந்த கலாசார மண்டபத்தை வந்தடையும்.பின்னர் மண்டபத்தில் பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

பிரதமஅதிதியாக கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.

கௌரவஅதிதிகளாக அம்பாறை மாவட்ட உதவிஉள்ளுராட்சி ஆணையாளர் எ.ரி.எம்.றாபி நிந்தவூப்பிரதேசசபைத்விசாளர் எம்.எ.எம்.தாஹிர் சம்மாந்துறைப்பிரதேசசைபத்தவிசாளர் எ.எம்.எம். நௌசாட் காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் மட்டு.மாவட்ட சமுகசேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி சம்மாந்துறை பொலிஸ்நிலையபொறுப்பதிகாரி இப்னுஅசார் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நட்சத்திரஅதிதிகளாக ஜனாதிபதி விருதுஊடகசான்றிதழ் பெற்ற சிரேஸ்ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா இளம்சாதனையாளர் சோ.வினோஜ்குமார் ஆகியோரும் மேலும் பல விசேடஅதிதிகள் ஆன்மீகஅதிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.நிகழ்வில் மட்டு.வழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் 75பேர் கலந்தகொண்டு கலைநிகழ்ச்சிகளை அளிக்கவுள்ளனர்.

(காரைதீவு நிருபர்)


Comments