15.11.19- சோறும் தொழிலும் முக்கியம் ஆனால் சுதந்திரமாக வாழ உயிர்முக்கியம்..

posted Nov 14, 2019, 5:36 PM by Habithas Nadaraja
சோறும் தொழிலும்  முக்கியம்  ஆனால் சுதந்திரமாக வாழ உயிர்முக்கியம்.
எனவே அன்னத்திற்கு வாக்களியுங்கள் என்கிறார்காரைதீவு தவிசாளர்ஜெயசிறில்..


எமது தமிழர்களுக்கு சோறும் தொழிலும் முக்கியம் இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் சோறும்  தொழிலும் புரிவதற்கு சுதந்திரமாக வாழ்வதற்கு உயிர் வேண்டும். அந்த உயிர்வாழவேண்டுமானால் அன்னத்திற்கு வாக்களிக்கவேண்டும்.

இவ்வாறு இந்தியாவிலிருந்து திரும்பிய காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஜனாதிபதி தோத்ல் தொடர்பாக கருத்துரைக்கையில் தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில்:

நாம் சோறும் தொழிலும் புரிய வேண்டுமானால் மொட்டிற்கு வாக்களிக்க வேண்டும் அதை உயிரோடு இருந்து தொழில் புரிந்து உண்ண வேண்டுமானால் அன்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்) பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்த அனுபவம் கொண்ட இனமாக காணப்படுகிறோம். இதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

 உங்களுக்கு தெரியும் நாங்கள் நிம்மதியாக வாழ்வதற்காக போராடுகின்ற ஒரு இனம்தான் தமிழர்கள் இன்னொரு இனத்தவரை  வீழ்த்துவதற்கோ அல்லது  வேறினத்தவர்களின் நிலங்களை அபகரிப்பதற்கோ  நாங்கள் ஒருபோதும் போராட தொடங்கவில்லை நாங்களும் இங்கு இருக்கின்ற சமூகங்களை போன்றும் சுதந்திரமாக வாழ்வதற்கு தான் வழிமுறையை தேடுகின்ற போது இனங்களுக்கான இடையூறுகளை விளைவிப்பதற்காக நாங்கள் ஒருபோதும் வாழ்ந்தவர்கள் அல்ல வாழப்போவதும் அல்ல.

தமிழர்களின் கலை கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியம் அடையாளம் என்பதை தக்க வைத்துக் கொள்ள போராடிய இனம் என்பது அனைவரும் அறிந்த விடயம். இங்கு இந்த இலங்கைத் திருநாட்டில் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து தமிழர்கள் தொடர்ச்சியாக பேரினவாத சிங்கள அரசினால் ஏமாற்றப்பட்டு வருகிறோம் அது அனைவரும் தெரிந்த விடயமாகும் தந்தை செல்வா தொடக்கம் அரசியல் ரீதியாகவும் போராட்ட ரீதியாகவும் நாங்கள் பல்வேறுபட்ட ஏமாற்றங்களையும் தொடர்ச்சியாக நாங்கள் ஏமாந்ததை பேரினவாத சக்திகள் ஏமாற்றியதை மறந்துவிட முடியாது.

 ஆனால் இக்காலகட்டத்தில் நாங்கள் சோறு சாப்பிட வேண்டும் இளைஞர்கள் தொழில் புரிய வேண்டும் அதற்கு நாங்கள் உயிரோடு வாழ வேண்டும் அதற்கு அமைவாக எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் மாண்புமிகு அமைச்சர் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களின் கரங்களையும் காரியங்களையும் மிகவும் அரசியல் தந்திரத்தை பயன்படுத்தி எமது தமிழர்களின் இருப்பையும் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக புறப்பட்டு இருக்கின்ற ஒரு அரசியல் தலைமை  அதேபோன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இக் காலகட்டத்தில் தாங்கள் நடுநிலையாகவோ அல்லது மௌனமாகவோ என்றால் தமிழருக்கு எதிரான கட்சிகள் இங்கு ஆட்சி அமைத்தால் தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட வாய்ப்பிருக்கின்றது அதேபோன்று கடத்தப்படும் வாய்ப்பிருக்கின்றது அதேபோன்று தமிழர்களை பிரித்தாளும்  அரசியல் தந்திரோபாயம்  தமிழரின் ஒற்றுமையை  சீர்குலைப்பதற்கு உரிய செயல்பாடுகள் அப்போது நடந்ததை நாங்கள் மறந்து விட முடியாது.
 
ஆகையால் இத் தேர்தலில் எமது தமிழ் தலைமை செல்லுகின்ற வழியில் நாங்கள் பயணிக்க வேண்டும் அதன் அடிப்படையில் நாங்கள் சோறு சாப்பிட வேண்டும் அதை தொழில் புரிந்து தான் சாப்பிட வேண்டும் அந்த தொழில் புரிந்து சோற்றை  சாப்பிடுவதற்கு நாங்கள் உயிரோடும் தங்களது உறவுகள் இங்கு இருக்க வேண்டும் அதற்கான பாதுகாப்பு ஜனநாயகம் ஒன்று தேவைப்படுகின்றது சுதந்திரமாகவும் அதே சமயத்தில் உயிரோடும் தமிழர்கள் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கு மாண்புமிகு அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் வழியில் புதிய ஜனநாயக ஆட்சிக்காக ஐக்கிய தேசிய கட்சியின் அன்னச் சின்னத்திற்கு வாக்களிப்போம்.

காரைதீவு   நிருபர்


Comments