நள்ளிரவில் சிசிரிவி கமரா உடைத்து பலசரக்குக்கடை கொள்ளை காரைதீவில் சம்பவம்:தவிசாளர்விரைவு பொலிஸ்விசாரணைஆரம்பம்.. மழைபொழிந்துகொண்டிருந்த நள்ளிரவு வேளையில் சிசிரிவி கமராவை உடைத்து பசரக்குக்கடையொன்று கொள்ளையிடப்பட்டிருக்கின்றது இச்சம்பவம் காரைதீவில் இடம்பெற்றது. காரைதீவு பிரதானவீதியில் பொதுநூலகத்திற்கு முன்பாகவுள்ள பிரதேசசபைக்குச் சொந்தமான சந்தைக்கட்டடத்தில் அமைந்துள்ள பாரிய பலசரக்குக்கடையிலேயே இக்கொள்ளை துணிகரமாக நடந்தேறியுள்ளது. இக்கொள்ளை தொடர்பாக கடைஉரிமையாளர் சாமித்தம்பி தங்கராசா சம்மாந்துறைப் பொலிசாருக்கு அறிவித்ததுடன் பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறிலுக்கும் அறிவித்தார். தவிசாளர் கி.ஜெயசிறில் ஸ்தலத்திற்குவிரைந்து பார்வையிட்டவேளைபொலிசாரும் வந்து விசாரணையைத் தொடங்கினர். கடையிலிருந்த தொலைபேசி அட்டைகள் சிகரட் பக்கட்டுகள் மற்றும் ஒருதொகை ரொக்கப்பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வாக்குமூலத்தில் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.சம்மாந்துறைப் பொலிசார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். (வி.ரி.சகாதேவராஜா) |
காரைதீவு செய்திகள் >