18.02.21- உலகின் முதல்தமிழ்ப் பேராசிரியர் பிறந்த மண்ணின் வாரிசுகளான நீங்கள் பாக்கியசாலிகள்..

posted Feb 17, 2021, 5:37 PM by Habithas Nadaraja   [ updated Feb 17, 2021, 5:39 PM ]
உலகின் முதல்தமிழ்ப்பேராசிரியர் பிறந்தமண்ணின் வாரிசுகளான நீங்கள் பாக்கியசாலிகள்
குழந்தைகளுக்கு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் ஜெயசிறில் வாழ்த்து..


உலகின் முதல்தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலர்த அடிகளார் பிறந்தமண்ணின் வாரிசுகளான நீங்கள் உண்மையில் பாக்கியசாலிகள்.

இவ்வாறு விபுலாநந்தா குழந்தைகளுக்கு வாழ்த்துத்தெரிவித்துரையாற்றிய காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் குறிப்பிட்டார்.

புதிய குழந்தைகளை வரவேற்கும் நிகழ்வு காரைதீவு விபுலாநந்தாமொன்ரிசோரி ஆசிரியைகளான ஜெயநிலாந்தினி ரம்யா தலைமையில் சுகாதாரநெறிப்படி நடைபெற்றது.

பிரதமஅதிதியாக தவிசாளரும் கௌரவஅதிதியாக பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜாவும் கலந்து சிறப்பித்தனர்.

தவிசாளர் ஜெயசிறில் மேலும் பேசுகையில்:
தாரமும் குருவும் தலைவிதிப்படி என்பார்கள். உண்மை.அதுபோல படிக்கக்கிடைக்கின்ற பாடசாலையும் தலைவிதிப்படிதான் அமைகின்றது. உங்களுக்கு சிறந்த பாடசாலை கிடைத்ததில் மகிழ்ச்சி.வேகத்துடன்கூடிய விவேகம் கொண்டநீங்கள் நிச்சயம் நல்ல கல்வியைப்பெற்று நற்பிரஜையாக மிளிரவாழ்த்துகிறேன் என்றார்.

(காரைதீவு  சகா)
Comments