19.03.21- சுவாமி நடராஜானந்தா ஜீயின் 54வது சமாதி தினநிகழ்வு..

posted Mar 18, 2021, 6:58 PM by Habithas Nadaraja
காரைதீவுமண்பெற்றெடுத்த மற்றுமொரு இ.கி.மிசன் துறவி சேவையின் சின்னம் சுவாமி நடராஜானந்தா ஜீயின் 54வது சமாதிதினநிகழ்வு (18.03.2021) அவர்பிறந்த காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது.

காரைதீவு பிரதானவீதியில் அமைந்துள்ள சுவாமியின் திருவுருச்சிலை முன்றலில் இந்நிகழ்வு இந்துசமயவிருத்திச்சங்கத்தலைவர் எஸ்.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக சுவாமிக்கு மலர்மாலை அணிவித்து புஸ்பாஞ்சலி செலுத்தி பஞ்சாராத்தி காட்டப்பட்டது.

அதிதிகளாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் பிரதேசசெயலக உதவிபிரதேசசெயலாளர் கே.பார்த்தீ பன் உள்ளிட்டோர் கலந்துசிறப்பித்தனர்.

சுவாமி நடராஜானந்தா நூற்றாண்டுவிழாக்குழுச் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா சுவாமி தொடர்பாக சிறப்புரையாற்றினார்.
சங்கச்செயலாளர் கு.ஜெயராஜி பஞ்சராத்திகாட்டி மகிழ்வுரை நிகழ்த்தினார்.

காரைதீவு  நிருபர் 

Comments