19.11.18- பிரபல இரசாயனவியல் ஆசிரியை நேசராணி காலமானார்..

posted Nov 18, 2018, 5:19 PM by Habithas Nadaraja
கல்முனை கார்மேல் பாத்திமாக்கல்லூரியின் ஓய்வுநிலை சிரேஸ்ட இரசாயனவியல் ஆசிரியை செல்வி தங்கராஜா நேசராணி (18.11.2018) அதிகாலை காலமானார்.

காரைதீவைச் சேர்ந்த இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது விஞ்ஞானமாணிப்பட்டத்தைப் பூர்த்தி செய்து இறுதிவரை கல்முனை கார்மேல் பாத்திமாக்கல்லூரியில் கற்பித்துவந்தார்.

காரைதீவு தங்கராஜா நேசம்மா தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியான இவர் எமது சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜாவின் மைத்துனியுமாவார்.

அவரால் உருவான பலநூறு வைத்தியர்களும் பொறியலாளர்களும் கல்வியியலாளர்களும் அவரது கற்பித்தலுக்கு சாட்சி என திறந்த பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும் அவருடன் அன்று கற்பித்தவருமான கே.ஞானரெத்தினம் தெரிவித்தார்.

நாளை (20.11.2018)  பகல் 3மணிக்குகாரைதீவு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுமமென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

காரைதீவு  நிருபர் 
Comments